CBI விசாரணை, வதந்திகள்! TVK பதில் பேசாதது ஏன்? | Journalist Sivapriyan Interview...
விதவிதமான இட்லி ரெசிப்பி: `அவல் இட்லி' செய்வது எப்படி?
அவல் இட்லி
தேவையானவை:
அவல் - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
இட்லி அரிசி - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அவலை தயிருடன் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பச்சரிசி, இட்லி அரிசியை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்துள்ள அவலையும் தயிரையும் ஒன்றாக அரைக்கவும். ஊறவைத்த அரிசியைத் தனியாக அரைக்கவும். ஊறவைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை ஒன்றாக அரைக்கவும். அரைத்த அனைத்தையும் ஒன்றின்பின் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்காமல் அப்படியே வைக்கவும். இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு பின்பு காலையில் இதனுடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி ஊற்றுவதுபோல் ஊற்றவும்.
ஓர் இட்லியில் 85 கலோரிகள் உள்ளது. இதில் சராசரியாக 2 கிராம் புரதம், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது.













