Valentino Garavani: ஃபேஷன் உலகமே அஞ்சலி செலுத்தும் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி -...
விதவிதமான இட்லி ரெசிப்பி: `ஜவ்வரிசி இட்லி' செய்வது எப்படி?
ஜவ்வரிசி இட்லி
தேவையானவை:
ஜவ்வரிசி - கால் கப்
இட்லி அரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
ஆமணக்கு விதை – இரண்டு அல்லது மூன்று (ஆமணக்கு விதை கிடைக்கவில்லையென்றால் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கலாம்.)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஜவ்வரிசி, இட்லி அரிசி இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும். உளுந்தையும் ஆமணக்கு விதையையும் ஒன்றாக ஊறவைக்கவும். ஆரு மணி நேரம் ஊறிய பின்னர் ஜவ்வரிசி, இட்லி அரிசி, இரண்டையும் ஒன்றாகச்சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு உளுத்தம்பருப்பு, ஆமணக்கு கலவையை அரைத்துக்கொள்ளவும். பின்னர் எல்லா மாவையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டு நன்கு கலந்து வைக்கவும். மாவு எட்டு மணி நேரம் புளித்த பின்பு மாவை இட்லிகளாக ஊற்றவும்.
குறிப்பு:
ஆமணக்கு விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஆமணக்கு விதை கிடைக்கவில்லையெனில் அரைத்த எல்லா மாவையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கும்போது கால் டீஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்துக் கலக்கவும்.
அரிசியை அரைக்கும்போது சிறிது அவல் சேர்த்தால், இட்லி பூப்போன்று இருக்கும். உளுந்து அரைக்கும்போது அதிகப்படியான தண்ணீர் ஊற்றக் கூடாது.














