Valentino Garavani: ஃபேஷன் உலகமே அஞ்சலி செலுத்தும் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி -...
விதவிதமான இட்லி ரெசிப்பி: `கர்நாடகா இட்லி' செய்வது எப்படி?
கர்நாடகா இட்லி
தேவையானவை:
அவல் - அரை கப்
ஜவ்வரிசி - அரை கப்
இட்லி அரிசி - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அவல், ஜவ்வரிசி இரண்டையும் நன்கு கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும். பின்னர் அரிசியைத் தனியாகவும் வெந்தயம், உளுந்து இரண்டையும் தனியாகவும் ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பின்பு ஊறவைத்த அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மைய அரைக்கவும். பின்பு உப்பு சேர்த்து கலக்கி மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் சிறிய கிண்ணங்களில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அவற்றில் மாவை முக்கால் கிண்ணம் அளவுக்கு ஊற்றவும். பின்னர் அவற்றை இட்லிப்பாத்திரத்தில் வைத்து 10-ல் இருந்து 12 நிமிடங்கள்வரை வேகவிட்டு எடுக்கவும். சூடு ஆறிய பின்பு சிறிய கரண்டி உதவியோடு கிண்ணங்களில் இருக்கும் இட்லிகளை எடுத்துப் பரிமாறவும்.
குக்கர் இட்லியைவிட, இட்லித் தட்டில் துணி விரித்து ஆவியில் வேகவைக்கும் இட்லியின் சுவை சிறப்பு!














