``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ...
`6.6% டு 7.3%: நினைத்ததை விட வேகமாக வளரும் இந்தியாவின் GDP; ஆனாலும் ஒரு சிக்கல்' - IMF அறிக்கை
2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம்.
அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு.
சர்வதேச நாணய நிதியத்தின், 2026-ம் ஆண்டின் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை கூறுவதாவது...
"இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நினைத்ததை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமாக இருந்தது. நான்காவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்து வருகிறது.

ஆனாலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தற்காலிக காரணிகள் மட்டுப்பட்டால், இந்த வளர்ச்சி 6.4 சதவிகிதமாக 2026-27 ஆண்டில் குறையலாம்
உலக அளவிலான வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அது நிலையாக தொடரும். 2026-ம் ஆண்டு 3.3 சதவிகித வளர்ச்சியையும், 2027-ம் ஆண்டு 3.2 சதவிகித வளர்ச்சியும் இருக்கும்.
உலக அளவிலான வளர்ச்சியை தற்போது வர்த்தக கொள்கைகளில் நடக்கும் மாற்றங்கள் குறைக்கின்றன. ஆனாலும், தென் அமெரிக்கா மற்றும் ஆசியா தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐயில் முதலீடு செய்வதால், வளர்ச்சி வேகத்தின் குறைவு சமன் செய்யப்படுகிறது".
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பும், மத்திய அரசின் கணிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. 2025 - 26 நிதியாண்டின் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



















