'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?
ஈரோடு: `பட்டியல் சாதியினருக்கு திருமண மண்டபம் தர மறுத்த விவகாரம்' - வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் டால்பின் என்ற பெயரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் தன்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதே பெருந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் முன்பணம் செலுத்தி, மண்டபத்தை புக் செய்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் சாதி குறித்து மண்டப உரிமையாளர் ரவி என்பவர் விசாரித்திருக்கிறார்.

பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என அந்தப் பெண்மணி உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ரவி, சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்டதுடன், பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மண்டபம் வாடகைக்கு விடுவதில்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அவமானத்தால் மனமுடைந்த அந்தப் பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். பல தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக மண்டப உரிமையாளர் ரவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் விதமாக உடல்நிலையைக் காரணம் காட்டி ரவியை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
``சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்ட ரவியை, காவல்துறை கைதுசெய்யாமல் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக" பட்டியல் சமுதாய மக்களுக்கான ஆதரவு இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகநீதி மக்கள் கட்சியினர், ``பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மண்டபம் வாடகைக்குத் தர முடியாது என பட்டவர்த்தனமாகச் சொல்கிறார்கள். இதனை தட்டிக்கேட்க வேண்டிய பெருந்துறை காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்ட ரவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளனர்.



















