செய்திகள் :

விதவிதமான இட்லி ரெசிப்பி: `கடலைப்பருப்பு இட்லி' செய்வது எப்படி?

post image

கடலைப்பருப்பு இட்லி

தேவையானவை:

கடலைப்பருப்பு - முக்கால் கப்

துவரம்பருப்பு - அரை கப்

இட்லி அரிசி - ஒரு கப்

பச்சரிசி - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - அரை கப்

உப்பு - தேவையான அளவு

கடலைப்பருப்பு இட்லி

செய்முறை:

பருப்பு வகைகளையும் அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை தேவையான தண்ணீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இட்லி அரிசி மற்றும் பச்சரிசியையும் மைய அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த உளுத்தம்பருப்பையும் நன்றாக அரைத்து, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். பின்னர் இட்லிகளாக ஊற்றவும்.

குறிப்பு:

விருப்பமெனில் மாவில் தாளிப்பு சேர்த்தும் இட்லிகளாக ஊற்றலாம்.

இட்லியின் சில அவதாரங்கள்: புளிக்க வைக்கப்படாத மாவில் ‘டோக்ளா’ (குஜராத்), புளிக்கச் செய்து கள் சேர்த்து, சிறிது இனிப்புடன் ‘வட்டப்பம்’ (கேரளம்), ‘சன்னாஸ்’ (மங்களூரு).

விதவிதமான இட்லி ரெசிப்பி: `அவல் இட்லி' செய்வது எப்படி?

அவல் இட்லிதேவையானவை: அவல் - ஒரு கப் பச்சரிசி - ஒரு கப் இட்லி அரிசி - ஒரு கப் தயிர் - ஒரு கப் உளுத்தம்பருப்பு - கால் கப் வெந்தயம் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவுஅவல் இட்லிசெய்முறை: அவலை தயிருடன் ச... மேலும் பார்க்க

விதவிதமான இட்லி ரெசிப்பி: `பனீர் இட்லி' செய்வது எப்படி?

பனீர் இட்லிதேவையானவை: பனீர் - 150 கிராம் கடலை மாவு - அரை கப் ரவை - அரை கப் தயிர் - ஒரு கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதள... மேலும் பார்க்க

விதவிதமான இட்லி ரெசிப்பி: `காஞ்சிபுரம் இட்லி' செய்வது எப்படி?

காஞ்சிபுரம் இட்லிதேவையானவை: பச்சரிசி - ஒரு டம்ளர் உளுத்தம்பருப்பு – கால் டம்ளர் வெந்தயம் - சிறிதளவு மிளகு - கால் டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் சுக்குப்பொடி - சிறிதளவு அல்லது பொடியாக நறுக்கிய ஒரு இஞ்... மேலும் பார்க்க

விதவிதமான இட்லி ரெசிப்பி: `சிறுதானிய இட்லி' செய்வது எப்படி?

சிறுதானிய இட்லிதேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப் சாமை - ஒரு கப் திணை - ஒரு கப் வரகு - ஒரு கப் உளுத்தம்பருப்பு - முக்கால் கப் வெந்தயம் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவுசிறுதானிய இட்லிசெய்முறை: இட்லி ... மேலும் பார்க்க

விதவிதமான இட்லி ரெசிப்பி: `ஜவ்வரிசி இட்லி' செய்வது எப்படி?

ஜவ்வரிசி இட்லிதேவையானவை: ஜவ்வரிசி - கால் கப் இட்லி அரிசி - 2 கப் உளுத்தம்பருப்பு - அரை கப் ஆமணக்கு விதை – இரண்டு அல்லது மூன்று (ஆமணக்கு விதை கிடைக்கவில்லையென்றால் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கலா... மேலும் பார்க்க

விதவிதமான இட்லி ரெசிப்பி: `கர்நாடகா இட்லி' செய்வது எப்படி?

கர்நாடகா இட்லிதேவையானவை: அவல் - அரை கப் ஜவ்வரிசி - அரை கப் இட்லி அரிசி - ஒரு கப் உளுத்தம்பருப்பு - கால் கப் வெந்தயம் - கால் டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவுகர்நாடகா இட்லிசெ... மேலும் பார்க்க