CBI விசாரணை, வதந்திகள்! TVK பதில் பேசாதது ஏன்? | Journalist Sivapriyan Interview...
விதவிதமான இட்லி ரெசிப்பி: `பனீர் இட்லி' செய்வது எப்படி?
பனீர் இட்லி
தேவையானவை:
பனீர் - 150 கிராம்
கடலை மாவு - அரை கப்
ரவை - அரை கப்
தயிர் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பச்சைப்பட்டாணி – 10 அல்லது 15 (எண்ணிக்கையில்)
கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
கடலை மாவு, ரவை இரண்டையும் தயிர், உப்பு சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்பு இதனுடன் பனீரை துருவி சேர்த்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி மற்றும் பச்சைப்பட்டாணி சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதைத் தயாரித்துவைத்துள்ள மாவில் போட்டு நன்றாகக் கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான பனீர் இட்லி தயார்.
குறிப்பு:
விருப்பப்பட்டால் பச்சைப்பட்டாணியைத் தவிர மற்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தினம் இரு வேளை இட்லி சாப்பிடுபவர்கள், அதில் ஒரு வேளைக்கு அரிசிக்குப் பதில், சிறுதானியங்களை உளுந்துடன் சேர்த்து அரைத்து ஊட்டச்சத்து இட்லியாக்கலாம்.













