செய்திகள் :

விருதுநகர்: சிறுமி மீது கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சியா? தட்டிக்கேட்ட தந்தைக்குக் கொலை மிரட்டல்

post image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில் வரி செலுத்துவது தொடர்பாக நெடுங்காலமாக முன்பகை இருந்து வருகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் 15 வயது மகளான சிறுமி தாரணி ஆடு மேய்த்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகத்தில் வந்த கார் சிறுமியின் மீது மோத முயன்றபோது சிறுமி விலகியதால் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த வயல்காட்டில் புகுந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கருணாநிதி காரில் வந்தவர்களைத் தட்டிகேட்டபோது காரிலிருந்து இறங்கிய இளைஞர்கள் ஆவேசத்துடன் கீழே கிடந்த கட்டைகளை எடுத்து தாக்க முயன்றதுடன் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்
கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்

முன்பகை காரணமாக குண்டுமலையின் மகன் ஆனந்தராஜ் (32) என்பவரின் தூண்டுதலின் பேரில் காரில் வந்த கும்பல் தனது மகளை காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டு தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுமியின் தந்தை கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி மீது கார் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

- சி.தா.வீரமணி

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க