விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம...
விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம் சூடிய மூவர்!
பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழிகாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் மூன்றாவது சீசனின் முதல் போட்டி விழுப்புரத்தில் இன்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், வளவனூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல் சுற்று தேர்வுக்காகப் பனங்கிழங்கு லட்டு, நுங்கு தேங்காய்ப்பால் சொதி, பனைமாவு பக்கோடா மிளகு மசாலா, சிரட்டை கருப்பட்டி புட்டு, பூண்டு பனைமாவு ஊத்தப்பம், பனையோலை கொழுக்கட்டை,பனங்கிழங்கு பாயாசம், பதநீர் தட்டைப்பயிறு களி கஞ்சி, கருப்பு உளுந்து கல்கண்டு மூலிகைப் பால், பனங்கிழங்கு கொத்து சப்பாத்தி, பீட்ரூட் பொரி தேங்காய்ப்பால் கேக், வாழைத்தண்டு துவையல், சீராளம், கம்பு பத்ரி, வெந்தய சாலட், மா இஞ்சி தொக்கு போன்றவை மணம் மாறாமல் வரிசைகட்டி நின்றன.
அதேபோல எள்ளு இட்லி, கேழ்வரகு சிமிலி உருண்டை, பிரண்டை சாதம், சம்பா ரவை அல்வா, சிவப்பு அவல் உசிலி, மஷ்ரூம் பாயாசம், கம்பு கட்லெட், பாசிப்பருப்பு ஸ்வீட் உப்புமா, பன்னீர் ரோஜா குல்கந்து, மரவள்ளிக்கிழங்கு ப்ரௌனி, சைவ ஈரல் வறுவல், தக்கடி, கோழி ஆப்பம், கடல்பாசி ஜெல்லி, வட்டிலாப்பம் என விதவிதமாக சமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதேபோல பிராக்கோலி சீஸ் கட்லெட், பக்லாவா, வழுதுணங்காய் தொக்கு, ராகி பிரௌனி, பிரண்டை வத்தல் போன்றவற்றை என வித விதமாக இருந்த அனைத்து உணவுகளையும் சுவைத்த செஃப் தீனா, அதன் செய்முறை குறித்து போட்டியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

இதற்கிடையில் காத்திருந்த போட்டியாளர்கள் மற்றும் அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு மேடையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பெற்றன.
தொடர்ந்து சீராளம், வெள்ளை பூரி, கோங்குரா சாதம், பசலைக்கீரை சாதம், பனங்கிழங்கு புட்டு, பிரண்டை வத்தல் செய்த நித்தியா, வெந்தயத் துவையல், கொத்தவரங்காய் துவையல், வாழைத்தண்டு துவையல், பீட்ரூட் பொறியல், தோசை சிப்ஸ், ஸ்வீட் லாலிபாப் கிளோரி, நரிப்பயறு துவையல், மூங்கில் குருத்து மசாலா, உண்ணிப்பூ பாயாசம், பப்பாளிக்காய் பொரியல், பொம்னாச்சிக்காய் பச்சடி, நஞ்சிக்கொட்டான் இலை ரோல் செய்த புவனேஸ்வரி, வஞ்சிரம் மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்த 80 வயது கிருஷ்ணவேணி அம்மாள் போன்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
அதையடுத்து செஃப் தீனா டாப் 10 தேர்வாளர்களை அறிவித்தவுடன், கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. பக்லாவா செய்த அல்நூரா அஸ்லாம், வத்தல் குழம்பு செய்த கற்பகவள்ளி, கறுப்பு உளுந்து பிஸ்கட் செய்த தர்ஷினி, பனங்கிழங்கு லட்டு செய்த தேவசினேகா, பனம்பழ அல்வா, பதநீர் நுங்கு மாம்பழநீர் செய்த வனஜா, ரத்தசாலி அரிசி கொழுக்கட்டை, ரத்தசாலி அரிசி புட்டு செய்த முருகன், உண்ணிப்பூ பாயசம், நரிப்பயறு துவையல் செய்த புவனேஸ்வரி, மஷ்ரூம் பாயாசம் மற்றும் சம்பா ரவை அல்வா செய்த சுமதி கோபால், வட்டிலாப்பம் செய்த ரசியாபேகம், சைவ உணவு வகைகளை செய்த சுவாதி சுந்தர் போன்றவர்களை அறிவித்தார். அந்த 10 பேருக்கும் சான்றிதழ்களுடன், பரிசுகளையும் வழங்கினார் செஃப் தீனா.

அவள் விகடனுடன் கோல்டு வின்னர், சத்யா, நாகா, எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், RKG நெய், மெரிபா பனீர், சௌபாக்யா, லலிதா ஜூவல்லரி, விகடன் ப்ளே, ஆஸ்கார் டி.வி போன்றவை இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், நாகா ரவையில் உண்ணிப்பூ பாயாசம், நாகா கடலை மாவில் நாட்டு நஞ்சுக்கொட்டான் ரோல் செய்த புவனேஸ்வரி `நாகா சுவை சாம்ப்' வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனித்தனி சமையல் டேபிளில் அந்த 10 பேரும் சமையல் செய்தனர். அவர்களில் முருங்கை பல்ப் கொத்சு செய்த புவனேஸ்வரி, உருளை ரோல் மற்றும் சம்பா பாயாசம் செய்த முருகன், சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம் செய்த வனஜா மூவரையும் சென்னையில் நடக்கும் இறுதிச் சுற்றுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு சக்தி மசாலா, கோல்டு வின்னர், சத்யா, நாகா ரவா, எக்சோ, அஸ்வின் ஸ்வீட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நாளை 08.02.2026 அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி, புதுச்சேரியில் ஜி.வி.ஹால், கர்ணன் தெரு, கருவடிக்குப்பம், லாஸ்பேட் மெயின் ரோடு, கென்னடி கார்டன் பகுதியில் நடைபெற இருக்கிறது.














