செய்திகள் :

விவசாயக் கல்லூரிகளில் பேராசிரியர் வேலை: காலியிடங்கள் 582

post image

இந்திய வேளாண் துறையின்கீழ் செயல்பட்டு வரும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், சீனியர் டெக்னிக்கல் அலுவலர் போன்ற 582 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professor(Subject Matter Specialist)

காலியிடங்கள்: 41

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77.500

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Technical Officer

காலியிடங்கள்: 83

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Agricultural Research Scientist(ARS)

காலியிடங்கள்: 458

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

ஏஎஸ்ஆர்பி - நெட் தேர்வு எழுதி கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு உச்ச வயதுவரம்பில்லை.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தகுதி: வேளாண் உயிரி தொழில்நுட்பம், வேளாண் பூச்சியியல், வேளாண் நுண்ணுயிரியல், தாவர உயிர் வேதியியல், மலர் வளர்ப்பு, பழ அறிவியல், விலங்கு உயிர் வேதியியல், விலங்கு ஊட்டச்சத்து, விலங்கு உடலியல், பால் வேதியியல், பால் நுண்ணுயிரியல், பால் தொழில்நுட்பம், கால்நடை தயாரிப்பு தொழில்நுட்பம், கால்நடை உற்பத்தி மேலாண்மை, கோழி அறிவியல், கால்நடை மருத்துவம், கால்நடை நுண்ணுயிரியல், கால்நடை மருந்தியல், மீன்வளர்ப்பு, தொழில்நுட்பம் வேளாண் வனவியல், வேளாண்மை, மண் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு பிரிவில்முதுகலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் ஏஎஸ்ஆர்பி-நெட் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஏஎஸ்ஆர்பி-நெட் தேர்வு முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டது.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 2.9.2025 - 4.9.2025

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 7.12.2025

தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.1000, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.asrb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் புராஜெக் அசோஸியேட் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள்... மேலும் பார்க்க

ரூ.45,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை: முதுகலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்(ஜிப்மர்) காலியாகவுள்ள Survey Field Data Collector பணிக்கு தகுதியானவர... மேலும் பார்க்க

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

சிஎஸ்ஐஆர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய தோல் (லெதர்) ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Executive... மேலும் பார்க்க

ஜிப்மரில் டெக்னீசியன் வேலை: பி.எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் காலியாகவுள்ள புராஜெக்ட் டெக்னீசியன் பணிக்கு பி.எஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: JIP/MICRO/Recru... மேலும் பார்க்க

விண்ணப்பிக்கலாம் வாங்க... திருச்சி ஐஐஎம் ஆராய்ச்சிப் பணி!

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாகவுள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Research Staffகா... மேலும் பார்க்க