செய்திகள் :

'விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!' - மீண்டும் போராட்டத்தை அறிவித்த விவசாய சங்கங்கள்

post image

கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதி படி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் வருகிற நவம்பர் - 25 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக 50 - க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, ஆலோசனகைக்கு பின் விவசாய சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் பரப்புரையின் போது ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் கூட்டுறவு பயிர் கடன்களையும், 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக கூட்டுறவு பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்வேன் என வாக்குறுதி அளித்ததோடு, இது உத்தரவாதம் எனவும் தெரிவித்ததோடு, நிபந்தனைகள் எதுவும் இன்றி முழுமையாக செய்வேன் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு, விவசாயிகள் - பொதுமக்களின் ஆதரவோடு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், தமிழ்நாட்டில் விவசாயிகள் மொத்தமாக 20,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர் கடன்களை பெற்றிருந்த நிலையில், வெறும் 2,000 கோடி ரூபாய் மட்டும் முதல் கட்டமாக அறிவித்தது, விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது.

farmers

அதன் பின்பு விவசாயிகளும் - விவசாய சங்கங்களும் தொடர்ச்சியாக போராடியதால் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 5,000 என்பதற்கு பதிலாக, 35,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பின்பு, 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து கூட்டமைப்பை ஏற்படுத்தி, திருச்சி - சமயபுரத்தில் ஐந்து நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால், விவசாய சங்க தலைவர்களோடு தலைமை செயலகத்தில் 9 -க்கும் மேற்பட்ட அமைச்சர் பெருமக்களும், போராட்டக் களத்திற்கு வந்து மூன்று அமைச்சர் பெருமக்களும் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், 30 நாட்களாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்பும் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் மீண்டும் கடந்த அக்டோபர் 22 -ம் தேதி திருச்சி - சமயபுரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க இருந்த சூழ்நிலையில், அதே நாளில் சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 75,000 ரூபாய் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் அப்படியே இருப்பதாலும், 2022, 2023, 2024, 2025 - ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய காலகட்டங்களில் பயிர் கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்டுள்ளதாலும், எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவ மழை பொய்த்து, தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், விவசாயிகளுக்கு தற்போது திருப்பி செலுத்தக்கூடிய தகுதி இல்லாத சூழ்நிலையிலும், புதிய கடன்களை பெற முடியாத சூழ்நிலை இருப்பதாலும், விவசாயிகளின் தொடர்ச்சியான நஷ்டத்தையும் உணர்ந்து அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில் முன்னேற்ற மட்டுமே ஏற்பட்டுள்ளது.

farners

எனவே, எங்களுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கவில்லை. எனவே, திருச்சி - சமயபுரத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற நவம்பர் 25-ம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இல்லாத மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களிலும், முழுமையாக கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், உத்தரவாதத்தின் படி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, முழு பயிர் கடன் தள்ளுபடி செய்யும் வரை கோரிக்கையை முன்னெடுத்து செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி: இயற்கை விவசாயத்தால் பசுமையான வறண்ட நிலம்; இளம் தம்பதி சாதனை! | Photos

பழ மரங்கள், நாட்டு மாடுகள் என இயற்கை வேளாண்மையில் வறண்ட நிலத்தை பசுமைச் சோலையாக மாற்றிய இளம் தம்பதிதேவி கன்னியாகுமரி அம்மன் கோயில்: நவராத்திரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய அம்மன் தலம்! மேலும் பார்க்க

பசுமை சந்தை...

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்க குவிந்த மக்கள்!

ஈரோடு ஜவுளி வாங்க குவியும் மக்கள்ஈரோடு ஜவுளி வாங்க குவியும் மக்கள்ஈரோடு ஜவுளி வாங்க குவியும் மக்கள்ஈரோடு ஜவுளி வாங்க குவியும் மக்கள்ஈரோடு ஜவுளி வாங்க குவியும் மக்கள்ஈரோடு ஜவுளி வாங்க குவியும் மக்கள்ஈர... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகும் பத்தமடை பாய் - திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதே போல, நெல்லை மாவட்டம், ”பத்தமடை” என்றாலே தரையில் படுத்து உறங்கும் கோரைப்புல்லால் நெய்யப்பட்ட பாய்தான் நினைவுக்கு வரும். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடை... மேலும் பார்க்க

ஈரோடு: அரசு விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர் விஜய்; முன்னேற்பாடுகள் தீவிரம் | Photo Album

ஈரோட்டில் முதலமைச்சர் வருகையை ஒட்டி முன்னேற்பாடுஈரோட்டில் முதலமைச்சர் வருகையை ஒட்டி முன்னேற்பாடுஈரோட்டில் முதலமைச்சர் வருகையை ஒட்டி முன்னேற்பாடுஈரோட்டில் முதலமைச்சர் வருகையை ஒட்டி முன்னேற்பாடுஈரோட்டில... மேலும் பார்க்க