செய்திகள் :

'விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு!'- கைவிரித்த ஆனந்த்; டென்ஷனில் முதல்வர்; பரிதவிப்பில் அமைச்சர் சரத்?

post image

மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்தான் கடந்த நான்கு நாட்களாக சமூகவலைதளங்களின் ஹாட் டாபிக். சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளை பயன்படுத்துவதை போல அவர் வெளியிட்டிருந்த வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

அமைச்சர் சரத்
அமைச்சர் சரத்

அமைச்சரை பதவி நீக்கக்கோரி திமுக மாணவரணியும் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தவெக முகாமுக்குள்ளும் அமைச்சர் விவகாரம் புயலை கிளப்பியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர், 'போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக முதல்வர் காலையில் மாரத்தான் ஓடி அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அமைச்சர் கில்லி சரத்தின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி கட்சி மீதும் முதல்வர் மீதும் கடும் விமர்சனங்கள் எழ தொடங்கிவிட்டது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

வீடியோவுக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் எரிகிற தீயில் எண்ணெய்யை வேறு ஊற்றிவிட்டார் அமைச்சர். விவகாரம் இணையத்தில் படு வைரலாக விஷயம் முதல்வரின் கவனத்தையும் எட்டியிருக்கிறது. அவரே அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து கடிந்து கொள்ளவும் செய்திருக்கிறார்.

முதல்வரின் கடும் அப்செட்டை வைத்துதான் சரத்தை அமைச்சரவையிலிருந்து நீக்க போகிறார்கள் எனும் கருத்து தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. உடனடியாக பதறிப்போன சரத், மனைவி குழந்தையோடு க்ரீன்வேஸ் சாலையில் உள்ள 'செண்பகம்' இல்லத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து பேசியிருக்கிறார். 'விளையாட்டாய் செய்ததை வேண்டுமென்றே பெரிதுப்படுத்தி அரசியல் ஆக்குகிறார்கள். தளபதியிடம் எடுத்துக்கூறுங்கள்' என மனம் வருந்தி பேசியிருக்கிறார். ஆனால், பொதுச்செயலாளர் சரத்திடம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

'விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு. அவர் எடுக்குறதுதான் முடிவு!' என கறாராக கூறியிருக்கிறார். எங்கே தனது பதவி பறிபோய்விடுமோ...என்கிற பரிதவிப்பில் செண்பகம் இல்லத்தை விட்டு கிளம்பினார் சரத். அதற்கேற்றார் போல கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் சரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு கூடுவாஞ்சேரியில் முதல்வர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக சரத் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், தலைமையின் உத்தரவின் பேரில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை' என்றனர்.

மேலும் பேசியவர்கள், 'திமுக இந்த விவகாரத்தை கையிலெடுத்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறது. இந்த நேரத்தில் சரத் மீது நடவடிக்கை என இறங்கினால் அரசியல்ரீதியாக அவர்களின் கை ஓங்கிவிடும். அதனால் 2-3 மாதங்கள் கழித்து அமைச்சரவை மாற்றத்தை செய்யும் போது பார்த்துக் கொள்ளலாம் என முதல்வர் தரப்புக்கு சீனியர்கள் சிலர் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் இறுதி முடிவு முதல்வரின் கையிலேயே இருக்கிறது' என்றனர்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க