செய்திகள் :

'வெற்றிக்குப் பின் பனையூர் வந்த விஜய்; தவெக MLA க்களிடம் என்ன சொன்னார்?

post image

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது தவெக. வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக விஜய் இன்று பனையூர் அலுவலகம் வந்திருந்தார். 106 எம்.எல்.ஏக்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். எம்.எல்.ஏக்களிடம் விஜய் என்ன பேசினார்?

Vijay
Vijay

தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெகவால் ஆட்சியமைக்க முடியுமா அப்படி ஆட்சியமைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா எனும் குழப்பம் பல எம்.எல்.ஏக்களுக்கே இருந்திருக்கிறது.

தங்களின் சந்தேகத்தை சிலர் விஜய்யிடமே கேட்டிருக்கின்றனர். அதற்கு விஜய் சொன்ன பதிலை கேட்டு எம்.எல்.ஏக்கள் பயங்கர உற்சாகமாக பனையூரை விட்டு கிளம்பியிருக்கின்றனர். விஜய்யிடம் பேசிவிட்டு வந்த எம்.எல்.ஏக்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். 'தலைவர் தேர்தலுக்கு முன்பிருந்தே நம்பிக்கையுடன்தான் இருந்தார். மக்கள் நம்மை மாற்றமாக பார்க்கிறார்கள். நம் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் தைரியமாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்யுங்கள் என்றார்.

Vijay
Vijay

வாக்குப்பதிவுக்கு பிறகும் எங்களை நேரில் அழைத்துப் பேசினார். கருத்துக்கணிப்புகள், வெளியில் பேசுவோரின் விமர்சனங்கள் எதையும் கருத்தில் கொள்ளாதீர்கள். நாம்தான் வெல்லப்போகிறோம். மே 4 நமக்கான ஆள் என்று கூறி எங்களின் கள அனுபவங்களையும் கேட்டறிந்து அனுப்பினார். இப்போதும் அதே உற்சாகத்துடன் தலைவர் இருக்கிறார். பெரும்பான்மை பற்றி எங்களுக்கு சந்தேகம் இருந்த போதும் தலைவர் பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார். 'நாம் அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்போம். கவலையே வேண்டாம்' என உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறார்' என்றனர்.

விஜய் 'அறுதிப்பெரும்பான்மை' எனப் பொடி வைத்துப் பேசியதால் வேறு கட்சிகள் சிலவற்றிடம் ஆதரவுக்காக தலைமைப் பேசி முடித்துவிட்டது என எம்.எல்.ஏக்கள் ஏக உற்சாகம் அடைந்திருக்கின்றநர்

ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க நாளை நேரம் கேட்டிருக்கிறார் விஜய். தன்னை முதல்வராக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கடிதத்தோடு ஆட்சியமைக்க உரிமைக் கோரவிருக்கிறார். நாளை மறுநாள் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும் ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வெளியூர் எம்.எல்.ஏக்களை மகாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் தங்கியிருக்குமாறு தவெக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க