செய்திகள் :

வேலூர் திமுக அலுவலகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு; 2,000 நாள்களைக் கடந்த அன்னதானம்!

post image

வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு, கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால், ஆதரவற்ற பலரும் பசியால் வாடினர். அப்போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், தன்னால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்கள் பெரும்பாலானோருக்குச் செய்தார்.

தி.மு.க அலுவலகத்தில் மதிய உணவு
தி.மு.க அலுவலகத்தில் மதிய உணவு

சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், நெய் சாதம், வெஜ் பிரியாணி என்று தினம் ஒரு உணவு சமைத்து பரிமாறப்பட்டு வருகிறது. தொடக்கத்தில், தினந்தோறும் ஆயிரம்பேர் சாப்பிடும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.

கொரோனா காலத்துக்குப் பிறகு, எண்ணிக்கை குறைந்ததால், வழக்கமான நடைமுறையாக தினமும் 250 பேருக்குச் சமைக்கப்படுகிறது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்திலும், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருந்த நந்தகுமார், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் ஒருநாள்கூட இடைவெளிவிடாமல் மதிய உணவு வழங்குவதை வாடிக்கையாக்கியிருந்தார்.

மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நந்தகுமார், வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், தனது அன்னதான சேவையை இரண்டாயிரம் நாள்களைக் கடந்தும் சிறப்பான முறையில் செய்துகொண்டிருக்கிறார்.

தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார்
தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார்

இதுபற்றி, தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாரிடம் கேட்டபோது, ``கொரோனா காலத்தில் மக்கள் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்களுக்கு நம்மளால முடிஞ்சதை செய்யணும்ங்கிறதுக்காக மதிய உணவு வழங்குற சேவையை பார்ட்டி ஆபீஸ்ல தொடங்கி வச்சேன்.

ஆதரவற்றவங்க முதற்கொண்டு அன்றாடங்காய்ச்சியா இருக்கிற உழைக்கிற மக்கள் வரையிலும் வயிறாரச் சாப்பிடுறாங்க. இதுல பெரிய மனநிறைவு கிடைக்குது. மதிய உணவு வழங்குறதை எப்பவும் நிறுத்த போறது கிடையாது’’ என்றார் புன்னகைத்து.

தமிழ்நாடு இடைத்தேர்தல்: 5 தொகுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட தடை; முன்னாள் MLA-களுக்கு செக்!

தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது. அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் ஆகும். இதில் திருச்சி கிழக்கை தவி... மேலும் பார்க்க

'டிசம்பரில் வங்கதேசத்திற்குத் திரும்புகிறேன்; எந்த அரசும் தவறுக்கு அப்பாற்பட்டது அல்ல' - ஷேக் ஹசீனா

2024-ம் ஆண்டு வேலைவாய்ப்பு கோட்டா பிரச்னை, ஊழல் போன்ற காரணங்களால் உள்நாட்டு கலவரம் வெடித்தது வங்கதேசத்தில். இது அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்தது. இதனால், வங்கதேசத்தில் இருந... மேலும் பார்க்க

`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..!' - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். இந்தக் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க

சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.திருப்புவனம் காவல் நி... மேலும் பார்க்க

`ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு; இடைத்தேர்தலில் வச்சு வெளுத்து வாங்குங்க.!'- விஜய்யின் முழு உரை

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர்... மேலும் பார்க்க

பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்?

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தளமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க