செய்திகள் :

வேல்ஸ் குழுமம்: முதல்வர் விஜயை பூங்கொடுத்துடன் வரவேற்ற ஐசரி கணேஷ்

post image

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அன்புடன் வரவேற்றார்.

முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற டாக்டர் ஐசரி கே. கணேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஐசரி கணேஷ் - முதல்வர் விஜய்
ஐசரி கணேஷ் - முதல்வர் விஜய்

தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்கும், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்கும் முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``தேசிய அளவிலான அங்கீகாரம்; பெருமை கொள்கிறோம்" - தங்கமயில் ஜுவல்லரி

தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றிருக்கும் நமது தங்கமயில் ஜுவல்லரி. சில சாதனைகள் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பயணத்தில் சிறப்புமிக்க அத்தியாயங்களாக பெயர் பெறுகின்றன. இன்று தங்கமயில் ஜுவல்லரி அத்தகைய தருணத்... மேலும் பார்க்க

இலையைக் கலையாக்கி வருமானம்... ₹500 முதலீட்டில் வெற்றிபெற்ற காஞ்சிபுரம் இளைஞர்!

அதிகாலை 6 மணி… கையில் ஒரு பை… இயற்கை கொடுக்கும் இலைகளைத் தேடி ஒரு பயணம்! குப்பையாகக் கருதப்படும் இலைகளுக்கு உயிரூட்டி, அவற்றைக் கலைப்படைப்புகளாக மாற்றி வருமானம் ஈட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

"Starlink-ஐ இந்தியாவுக்குள் வரவிடாமல் பெருமுதலாளிகள் தடுக்கிறார்கள்" - எலான் மஸ்க் குற்றச்சாட்டு

உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்தான் ஸ்டார்லிங்க்.செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் இந்த இண்டர்நெட் சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கான அனைத்து ம... மேலும் பார்க்க

`பாவம் பார்த்து கைத்தறிப் பொருளை வாங்காதீங்க; எங்க உழைப்பை மதிங்க போதும்!'- ஐடி ஊழியரின் நெசவு பயணம்

பெங்களூருவில் மாதம் எழுபதாயிரம் முதல் லட்சம் வரை சம்பளம்... கையில் நல்ல வேலை... நகர வாழ்க்கை... இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் சம்பளம் கூடும் நிலை, வசதிகள் பெருகும் என்ற சொகுசான பாதை அவருக்கு முன்பே... மேலும் பார்க்க

கல்லூரி மாணவனாக தொடங்கிய கனவு... இன்று தொழில்முனவோராக நிற்கும் விழுப்புரம் இளைஞர் அருண் குமார்!

“படிப்பை முடித்துவிட்டு ஒரு corporate job-க்குச் செல்... இப்படி ரிஸ்க் எடுக்காதே” என்ற அறிவுரைகளுக்கு மத்தியில், தனது ஆர்வத்தின் மீது நம்பிக்கை வைத்து தொழில் தொடங்கிய 22 வயது அருண் குமார்!“Business என... மேலும் பார்க்க

‘Tata Sons-ஐ பட்டியலிடக் கூடாது’: சந்திரசேகரனால் பிரச்னையா? நோயல் டாடாவின் Loop Hole என்ன?!

ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்கிற என்.சந்திரசேகரனின் எண்ணம்தான் நோயல் டாடாவின் மிகப்பெரிய அதிருப்தி.நோயல் டாடா vs சந்திரசேகரன் டாடா சன... மேலும் பார்க்க