செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோபர்  2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பற்றாளர் அறிக்கை நகல், பிள்ளையார்குளம் ஊராட்சியில் 2020 முதல் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வரவு செலவு விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 3 மனுக்கள் அளித்திருந்தார். இந்த மனுக்களுக்கு பொது தகவல் அலுவலர் காலதாமதமாக பதில் அளித்ததுடன், ஆவணங்கள் இல்லை என பதில் வழங்கியதால் மாநில தகவல் ஆணையத்தில் அம்மையப்பன் மேல் முறையீட்டு மனு செய்திருந்தார்.

தங்க பாண்டியன்

இந்த மனு, மாநில தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்த போதும் அந்லுவலகத்தில் ஆவணங்கள் இல்லை எனத்  தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை நேரில் அழைத்து விசாரித்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  ”மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டது. எஸ்.பி விசாரணையிலும் ஆவணங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் அளித்த புகார் மனுவில், கடந்த 2023 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பணி மாறுதல் உத்தரவை செயல்படுத்தாதது குறித்த கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை தாக்கியதால் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் பொறுப்பில் இருந்த கிராம சபை புத்தகங்கள், செலவின சீட்டு விபரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் காசோலைகள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை செய்த போது, தங்கபாண்டியன் கையாடல் மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வன்னியம்பட்டி காவல் நிலையம்

அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை திருடி சென்று விட்டாதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் முன்னாள் ஊராட்சி செயலர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் - 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்க... மேலும் பார்க்க

நீதிபதியின் கையெழுத்துடன் பணி உத்தரவு: கர்நாடகா கோர்ட்டில் வேலை என கூறி ரூ.25 கோடியை ஏமாற்றிய தம்பதி

பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் - காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏபழனியாண்டிக்கு சொந்தமானது என்றும... மேலும் பார்க்க

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இரு... மேலும் பார்க்க

மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு – திருடர்களை வலை வீசி தேடி வரும் போலீஸார்!

பொதுவாக தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டம், இட்டமொழியில் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்ப... மேலும் பார்க்க

பள்ளி மாணவி கொலை வழக்கு: ஒரே ஸ்டைலில் கொலைகள் - குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாலை சுமார் 6 மணியளவில் சென்றவர் நீண... மேலும் பார்க்க