``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்ப...
``ஸ்லீப்பர் கோச்சுக்கும் தலையணை, பெட்ஷீட்'' - பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் புதிய சலுகை என்ன?
சென்னைக்கு ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.
வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், ஸ்லீப்பர் கோச்சில் சென்னை அல்லது மங்களூருக்கு பயணிப்பவர்களுக்கு பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வழங்கப்பட உள்ளது.
'இலவசம்' என்று நினைத்துவிடாதீர்கள். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வேண்டுமென்றால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பெட்ஷீட் மட்டும் போதுமென்றால் ரூ.20 கட்ட வேண்டும். தலையணை, தலையணை உரை மட்டும் போதுமென்றால் ரூ.30 செலுத்த வேண்டும்.

ஏ.சி கோச்
இதுவரை ஏ.சி கோச்களுக்கு மட்டுமே தலையணை, தலையணை உரை, பெட்ஷீட் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ஸ்லீப்பர் கோச்சிற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ.சி கோச்களுக்கு அவை இலவசம் (அதாவது டிக்கெட் கட்டணத்துடனேயே சேர்க்கப்பட்டுவிடும்) என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இனி ரயில் தனியாக பயணத்திற்கு தலையணை, தலையணை உரை, பெட் ஷீட் கொண்டுபோக வேண்டியதாக இருக்காது.
ஹேப்பி ஜர்னி மக்களே!


















