செய்திகள் :

ஹபீபி: "'என்னமோன்னு நினைச்சேன்; நல்லா நடிச்சுருக்கீங்கப்பா'ன்னு தனுஷ் சொன்னார்" - கஸ்தூரி ராஜா

post image

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஹபீபி'.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று (ஜீன்.22) நடைபெற்றது.

Habeebi | ஹபீபி
Habeebi | ஹபீபி

இதில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, "சமீபத்தில் எங்கள் வீட்டில் ஒரு நிகழ்வு நடந்தது. ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்தோம்.

நான், என் மனைவி, செல்வராகவன், தனுஷ், பேரன், பேத்திகள் என எல்லோரும் சேர்ந்து தனுஷ் வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்தோம். அப்போது ஒரு சம்பவம் நடந்தது.

எனக்கு இரண்டு மகள்கள். அதில் ஒரு பெண் விமலா கீதா. சிங்கம் மாதிரி... அந்தப் பெண்ணைப் பார்த்தால் எங்கள் வீட்டில் உள்ள எல்லோருமே பயப்படுவோம்.

அவர் இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அமைதியாக இருந்தார். பிறகு இறுதிக்காட்சி வரும்போது உடனே எழுந்து வெளியே சென்றுவிட்டார். அரை மணி நேரம் அழுதார்.

கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா

'ஏம்மா அழுகுற'ன்னு கேட்டேன். 'ஏன் டாடி இப்படி எல்லாம் நடிக்குறீங்கன்னு கேட்டாங்க'. எனக்கே இது புதுவித அனுபவமாக இருந்தது. இந்தப் பொண்ணு அழுகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுதான் தியேட்டர் ரிசல்ட்டாகவும் இருந்தது.

தனுஷ் வந்து என்னை மேலையும் கீழையும் பார்த்தார். "சூப்பரா பண்ணிருக்கீங்க... நான் கூட என்னமோன்னு நினைச்சேன். நல்லா நடிச்சிருக்கீங்கப்பா... எங்கையாவது ஏமாந்து போயிருவீங்கன்னு நினைச்சேன். ஆனா கெளவுரவமான படத்தில நடிச்சுருக்கீங்க" என்றார். இந்தப் பெயரை எனக்கு வாங்கிக்கொடுத்த மீரா கதிரவன் சாருக்கு நன்றி" என்று உருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார்.

Arjun Das: ``எனக்கு இரண்டு முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!" - அர்ஜுன் தாஸ் கலகல

மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இ... மேலும் பார்க்க

Karuppu: "கிளைமேக்ஸ்ல சூர்யா சாருக்கு டூப் போட்டது நான்தான்" - 'டூப் கலைஞர்' கோட்டீஸ்வரன் பேட்டி

திரைப்படங்களில் நாம் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டாடும் ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளுக்கும் பின்னால் எண்ணற்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். காட்சிகளைத் திட்டமிடுவது, அவற்றைச் செயல்படுத்துவது என ஸ்டண்ட் காட்சிக... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவிக்க பிரபலங்கள் பகிர்ந்த புகைப்படங்கள் | Photo Album

முதல்வர் விஜய், வாய் திறக்காமல் இருக்கிறார் என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மக்கள் கருத்து? மேலும் பார்க்க

'அயோத்தி' பட இயக்குநரின் அடுத்த படம்; மதுரையில் தொடங்கிய ஷூட்டிங்; ஹீரோ யார்? பரபர அப்டேட்!

'அயோத்தி' பட இயக்குநரின் அடுத்த அதிரடி ரெடியாகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டில் சசிகுமாரின் நடிப்பில் வெளியான படம் 'அயோத்தி'. இந்த மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் படம் முன்னிறுத்தியது. பல்வேறு விருதுகளை... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: "அந்த சீனுக்கு மட்டும் 1.2 கோடி செலவு பண்ணியிருக்கோம்!" - நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகத்தையும் முடித்... மேலும் பார்க்க

"விஜய் ஆண்டனி சார் எப்படி ஒத்துக்கிட்டாருனு தெரியல" - 'நூறு சாமி' படம் குறித்து கண்கலங்கும் ஸ்வாசிகா

இயக்குநர் சசி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'நூறு சாமி' படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷா எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீரா... மேலும் பார்க்க