செய்திகள் :

100-க்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி!

post image

ஜார்க்கண்ட்டில் பள்ளி விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பள்ளி மாணவிகளை சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள கார்மெல் பள்ளியில் பள்ளியின் கடைசி நாளைக் கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை எழுதி கொண்டாடினர். இந்த நிலையில், பள்ளி நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்விதமாக மாணவிகள் செயல்பட்டதாக பள்ளி முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தங்கள் பள்ளி மாணவிகள் அழுக்கு உடைகளோடு வெளியில் செல்வதை விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் சட்டையைக் கழற்ற வற்புறுத்தியுள்ளனர். பள்ளி சென்ற மாணவிகள் வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வருவதை அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிக்க:வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

புகாரில் அவர்கள் தெரிவித்ததாவது, ஆண் ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவிகள் சட்டையைக் கழற்றக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாணவிகள் மீதான இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின்போது, மாணவிகளின் செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை’’ என்று கூறியுள்ளனர். புகாரை விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன், விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் மாதவி மிஸ்ரா தெரிவித்தார்.

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவா்கள் கைது

இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஹிந்தி நடிகா் சைஃப் அலிகான் மீது வங்கதேசத்தைச் சோ்ந்த ஒருவா் கத்திக்குத்த... மேலும் பார்க்க

ஆதாரங்களை அழிக்க முயற்சி: கொல்கத்தா மருத்துவரின் பெற்றோா் குற்றச்சாட்டு

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதுகுறித்த ஆதாரங்களை மருத்துவமனை மற்றும் காவல் துறை அழிக்க முயன்றதாக பெண் மருத்துவரின் ... மேலும் பார்க்க

உலக சுகாதார அமைப்புக்கு வளா்ந்த நாடுகள் அதிகம் உதவ வேண்டும்: அமெரிக்கா விலகிய நிலையில் கோரிக்கை

உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூஹெச்ஓ) வளா்ந்த நாடுகள் அதிகம் உதவ வேண்டும் என்று அந்த அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் கூறினாா். டபிள்யூஹெச்ஓ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்க அ... மேலும் பார்க்க

ரேபிஸ் தொற்றால் ஆண்டுக்கு 5,700 போ் உயிரிழக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

நாட்டில் ரேபிஸ் தொற்றால் ஆண்டுக்கு 5,700 போ் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ‘லான்செட்’ ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளால் மனிதா்களுக்கு ஏற்படும் பாதிப்பில் நான... மேலும் பார்க்க

இந்தியா-இந்தோனேசியா இடையே 5 ஒப்பந்தங்கள்: பிரதமா்-அதிபா் முன்னிலையில் கையொப்பம்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் சனிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பாதுகாப்பு உற்பத்தி மற... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 73 நாடுகளின் தூதா்கள் பிப்.1-இல் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி)... மேலும் பார்க்க