செய்திகள் :

11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

post image

யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவை பற்றி தினம் தினம் செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

புனேவைச் சேர்ந்த டாக்டருக்கு 75 வயது. கடந்த ஜனவரி மாதம் அவருடைய செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. ''பங்குச் சந்தையில் நாங்கள் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்தால், 11 நாளில் பணம் இரட்டிப்பாகும்'' என்று அந்த எஸ்.எம்.எஸ் சொல்ல, 'அட, இது நல்ல லாபமா இருக்கே...?' என்று நினைத்து, எஸ்.எம்.எஸ்-ல் இருந்த நம்பருக்கு போன் செய்தார்.

எஸ்.எம்.எஸ் அனுப்பிய மோசடிக் கும்பல் இந்த டாக்டருக்கு போன் செய்து, அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார், எவ்வளவு பணத்தை லாபமாகப் பெற நினைக்கிறார் என்பதை எல்லாம் நைஸாகப் பேசி வாங்கியது. பிற்பாடு அவரை 'வி.ஐ.பி ஸ்டாக்ஸ் 24" என்று ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் சேரும்படி சொன்னது.

Doctor

அதன்பிறகு அவருக்கு ஒரு டிரேடிங் பிளாட்பார்ம் இணையதளத்தை அனுப்பியது அந்த மோசடிக் கும்பல். இந்த இணையதளம் பார்ப்பதற்கு பக்காவாக வெளிநாட்டு இணையதளம் போல இருந்ததால், அதில் பணத்தைப்போட ஆரம்பித்தார் டாக்டர். கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையில் மோசடிக் கும்பல் தந்த 8 வேறு வேறு அக்கவுன்ட்டுகளில் 8 முறை ட்ரான்ஷாக்சன்களில் 12.31 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்தார் டாக்டர்.

ஒரு கட்டத்தில் இந்த மோசடி கும்பல் பற்றி டாக்டருக்கு சந்தேகம் வர, பணத்தைப் பரிமாற்றம் செய்ய மறுத்திருக்கிறார். ஆனால், மோசடி கும்பலோ, அவருடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்துவிடுவோம் என்றெல்லாம் மிரட்டி பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறது.

ஆனால், 11 நாளில் டபுளாகப் பணம் தருவோம் என்று சொன்ன மோசடி கும்பல், ஒரு மாத காலம் ஆனபின்பும் லாபத்தைக் கண்ணில் காட்டவில்லை. இன்னும் அதிகமான பணத்தைப் போடும்படி மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவே, மோசடி கும்பலிடம் வசமாக சிக்கிவிட்டதை உணர்ந்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க நினைப்பதற்குள், மோசடிக் கும்பல் போன இடம் தெரியவில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த 12 கோடி ரூபாயை அநியாயத்துக்கு இழந்துவிட்டோமே என்று இப்போது அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார் அந்த டாக்டர்.

உள்ளபடி பார்த்தால், பங்குச் சந்தையில் பணம் போட்டால், 11 நாளில் பணம் டபுள் ஆகும் என்று யாராவது சொன்னால் நம்பலாமா? நம்பவே கூடாது என்பது மட்டுமல்ல, அது மாதிரி பேசும் நபர்களிடம் இருந்து தூர விலகி நிற்க வேண்டும். பொதுவாக நம் பணமானது எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காகப் பெருகும் என்பதற்கு ஒரு ஃபார்முலா இருக்கிறது. 72 என்கிற எண்ணை நமக்குக் கிடைக்கும் லாப விகிதத்துடன் வகுத்தால், எத்தனை ஆண்டுகளில் நீங்கள் நீங்கள் முதலீடு செய்த டபுளாகும் என்பதை சொல்ல முடியும். உதாரணமாக, நீங்கள் வங்கி எப்.டி.-ல் 1 லட்சம் போட்டு வைத்திருக்கிறீர்கள். இதற்கு ஆண்டுதோறும் 7% வட்டி வருமானம் கிடைக்கிறது எனில், உங்கள் பணம் டபுள் ஆவதற்கு 10.3 வருடங்கள் ஆகும்.

Gobi

ஸ்டெப் அப் முதலீட்டின் மூலம் செல்வத்தைப் பெருக்குவது எப்படி என்கிற ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் https://labham.money/events/webinar-apr12-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr12_2026 இந்த லிங்க்கை க்ளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்!

உங்கள் முதலீட்டுப் பணத்துக்கு ஆண்டுதோறும் எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பதுதான் சொல்வதுதான் CAGR என சுருக்கமாக சொல்லப்படும் Compounding Annual Growth Rate. நம் முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்தால், எத்தனை ஆண்டுகளில் அது டபுளாகும் என்பதை இனி பார்ப்போம்.

ஆண்டுதோறும் 2% லாபம் கிடைத்தால் - 36 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 3% லாபம் கிடைத்தால் - 24 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 4% லாபம் கிடைத்தால் - 18 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 5% லாபம் கிடைத்தால் - 14.4 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 6% லாபம் கிடைத்தால் - 12 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 7% லாபம் கிடைத்தால் - 10.3 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 8% லாபம் கிடைத்தால் - 9 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 9% லாபம் கிடைத்தால் - 8 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 10% லாபம் கிடைத்தால் - 7.2 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 11% லாபம் கிடைத்தால் - 6.5 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 13% லாபம் கிடைத்தால் - 5.7 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 14% லாபம் கிடைத்தால் - 5.3 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 15% லாபம் கிடைத்தால் - 5 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

ஆண்டுதோறும் 20% லாபம் கிடைத்தால் - 3.8 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்

இதுதான் நம் பணம் டபுள் ஆவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவாகும். அதிகமான விகிதத்தில் நமக்கு லாபம் கிடைத்தால், குறைந்த காலத்தில் நம் பணம் டபுள் ஆகும். குறைந்த விகிதத்தில் வருமானம் கிடைத்தால், நம் பணம் டபுள் ஆவதற்கு அதிக காலம் பிடிக்கும்! இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், நாம் எந்த அளவு ரிஸ்க் எடுக்கலாம் என்பதை எளிதாக முடிவு செய்ய முடியும்!

ஆண்டுதோறும் 20% லாபம் தொடர்ச்சியாகக் கிடைப்பதே அரிது என்கிறபோது 11 நாளில் நம் பணம் இரண்டு மடங்காகப் பெருக வேண்டும் என்றால் அது எத்தனை ஆயிரம் சதவிகிதத்தில் வளர வேண்டும் என்பதை நீங்கள் கணக்கு போட்டுப் பாருங்கள்! ஒரே மாதத்தில் பணம் டபுளாகும், ஒரே ஆண்டில் பணம் டபுளாகும் என்று இனி யாராவது உங்களிடம் சொன்னால், `உடு ஜூட்' என்று காணாமல் போய்விடுங்கள்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?

இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.

வாழ்நாள் முழுவதும் உழைக்கப் போகிறீர்களா? உண்மையான செல்வத்தை உருவாக்கும் 6 ரகசியங்கள்!

பணக்காரராக இருப்பதற்கும், உண்மையான செல்வந்தராக (Wealthy) இருப்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 'The Psychology of Money' புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் சொல்வது போல, "நீங்கள் செலவு செய்த பணம்... மேலும் பார்க்க

NRI Corner - 5: இந்த `3'-ம் இல்லாமல் எதில் முதலீடு செய்தும் எந்தப் பயனும் இல்லை... அந்த `3' என்ன?

சமீபத்தில் என்னைச் சந்திக்க 'லாபம்' அலுவலகத்திற்கு வந்திருந்தார் அஜ்மல். குவைத்தில் இருந்து ஒரு வார அவசரப் பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு என்னை சந்திக்க வந... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டை பயன்படுத்தி கெத்தா, சூப்பரா, ஓஹோனு இருக்கணுமா? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 5நேற்றைய அத்தியாயத்தில் எப்படி பாசிட்டிவ் மற்றும் பாதுகாப்பைப் பார்த்தோமோ... அது மாதிரி இன்று கிரெடிட் கார்டிற்கு இருக்கும் செக்குகளைப் பார்த்துவிடுவோம். கிரெடிட் கார்டு பற்றி நமக்கு விளக்குபவர் ... மேலும் பார்க்க

NRI-களே... ஊர் திரும்பியதும் உங்கள் மாதாந்திர பென்ஷனுக்கு என்ன கேரண்டி?!

வெளிநாடுகளில் குடும்பத்தைப் பிரிந்து, இரவு பகலாக உழைத்துச் சம்பாதிக்கிறீர்கள். இன்று கை நிறையச் சம்பளம் வரலாம். ஆனால், ரிட்டயர்மென்ட் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது, ஒவ்வொரு மாதமும் குடும்பச்... மேலும் பார்க்க

'ஒரு லிட்டர் பெட்ரோல் 265 ரூபாய்' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்! - எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

''அவனுக்கென்னப்பா, கோடீஸ்வரன். எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா இருக்கான்'' என்று சில நண்பர்களைப் பற்றி சிலர் கொஞ்சம் பொறாமையுடன் பேசுவதைக் கேட்டு இருப்பீர்கள். கோடீஸ்வரன் என்பது இன்றைக்கு ஒரு கெத்து ஃபீ... மேலும் பார்க்க

NRI Corner 4 - SIP பத்தி தெரிஞ்சுக்கிட்டா மட்டும் போதாது; SWP பத்தி தெரிஞ்சுக்கிட்டு சூப்பரா இருங்க!

பணம் சேமிக்கணும்… அதே நேரத்தில் வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும்… இந்த இரண்டு விஷயத்தையும் சூப்பரா பேலன்ஸ் பண்ண உதவுகிற கருவிகள்தான் SIP மற்றும் SWP! இதில் SIP பற்றி ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. ஆனால், SWP..... மேலும் பார்க்க