செய்திகள் :

11 மாதக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்; கொன்றுவிட்டு நாடகமாடுகின்றனரா பெற்றோர்? பிண்ணனி என்ன?

post image

பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாகனூர் கிராமத்தில் வசிக்கும் ஷேகப்பா தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் தனது புகாரில், தனைவி விஜயலட்சுமி குழந்தைக்கு பால் புகட்டும்போது தூங்கியதால், குழந்தை 2 அடி உயர கட்டிலில் இருந்து விழுந்து காயமடைந்து இறந்துவிட்டதாகக் கூறி இருந்தார்.

கட்டிலில் இருந்து குழந்தை தவறி விழுந்தவுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை விரைவாகக் கொண்டு சென்றதாக ஷேகப்பா தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

குழந்தை
குழந்தை

போலீசார் முதலில் இதனைச் சந்தேகத்திற்குரிய மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.

குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெற்றோர் கூறியது அனைத்தும் பொய் எனத் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிகப்படியான உள் இரத்தப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததை உறுதி செய்தது. குழந்தையின் முகம், மார்பு, கால்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்தன.

மேலும் 2 அடி உயர கட்டிலில் இருந்து விழுந்தால் இவ்வளவு பெரிய உள் காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று மதிய உணவிற்கு ஷேகப்பா வீட்டிற்கு வந்தபோது கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் சண்டையிடும்போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய் விஜயலட்சுமி குழந்தையை உதைத்துள்ளார். தொடர்ந்து தந்தை ஷேகப்பா குழந்தையைத் தூக்கி தரையில் பலமாக வீசி எறிந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை ஷேகப்பா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொடூரக் குற்றத்தில் தாயின் முழுமையான பங்கு குறித்து பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான சண்டைகள் நடந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதோடு தந்தை ஷேகப்பாவின் மனைவி விஜயலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு அண்டை வீட்டுக்காரருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், அதன் காரணமாக கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விஜயலட்சுமிக்குத் தனது 11 மாதக் குழந்தை மீது எவ்வித பாசமும் இருக்கவில்லை என்றும், அவர் குழந்தையை மிகவும் அலட்சியமாகவே வளர்த்து வந்ததாகவும் சாட்சிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

நாடகமாடியதாகச் சொல்லப்படும் பெற்றோர்
நாடகமாடியதாகச் சொல்லப்படும் பெற்றோர்

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, போலீசார் இந்த விபத்து மரண வழக்கைத் திட்டமிட்டு கொலை வழக்காக மாற்றியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொலையை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக ஷேகப்பா, விஜயலட்சுமி, ஷேகப்பாவின் தம்பி மற்றும் 19 வயதுடைய மற்றொரு இளைஞர் ஆகியோரின் ஆடைகளைக் களைந்து, கட்டி வைத்து போலீசார் கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததாக குடும்பத்தினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டை போலீஸார் மறுத்துள்ளனர். சம்பவத்தன்று நடந்த சண்டையின் போது, தாய் விஜயலட்சுமி தனது 11 மாதக் குழந்தையை ஒரு துரதிர்ஷ்டம் என்று திட்டி உதைத்ததாக போலீசார் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க