செய்திகள் :

`12-ம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்வில் கால்குலேட்டர்’ - அட்டவணை வெளியிட்ட அன்பில் மகேஸ்

post image

2026-ம் ஆண்டிற்கான 10-வது மற்றும் 12-வது வகுப்பின் பொது தேர்வு அட்டவணைகளை இன்று வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

12-ம் வகுப்பு

12-ம் வகுப்பின் பொது தேர்வு வருகிற மார்ச் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடத்தப்படும். இந்தத் தேர்வின் செய்முறை தேர்வு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறும்.

இந்தத் தேர்வின் முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்படலாம்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

10-ம் வகுப்பு

10-ம் வகுப்பின் பொது தேர்வு வருகிற மார்ச் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வின் செய்முறை தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறும்.

இந்தத் தேர்வின் முடிவுகள் மே மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்படலாம்.

கால்குலேட்டர்

வருகிற பொது தேர்வில் முதன்முறையாக கணக்குப் பதிவியல் (Accountancy) தேர்விற்கு 12-ம் வகுப்பு மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தலாம்