செய்திகள் :

"15 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம்"- செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக்குழு

post image

வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்று அறிவிப்பதற்காக செளராஷ்ட்ர அரசியல் ஒருங்கிணைப்புக் குழு (SPAC) மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகின்ற டிசம்பர் 28 அன்று அரசியல் எழுச்சி மாநாடு நடத்துகிறது.

மாநாட்டுப் பணிகள் தொடக்கம்
மாநாட்டுப் பணிகள் தொடக்கம்

அதை முன்னிட்டு மாநாட்டுக்கான வலைதளம், மாநாட்டுக்கான செளராஷ்டிர மொழி பாடல் வெளியீடு மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செளராஷ்ட்ர அரசியல் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கே.ஆர்.எம் கிஷோர்குமார், "தமிழகத்தில் 15 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக சௌராஷ்டிரா சமூகத்தினர் இருந்து வருகிறார்கள். அப்படியிருந்தும் ஓர் இடத்தில்கூட பிரதிநிதித்துவம் இல்லை.

மதுரையில் மட்டும் இரண்டு லட்சம் சௌராஷ்டிரா வாக்காளர்கள் உள்ளனர். மதுரை தெற்குத் தொகுதியில் 40 ஆயிரம் பேர், திருப்பரங்குன்றத்தில் 80 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால், ஒரு வார்டில் கூட சௌராஷ்டிரா சமூக கவுன்சிலர் இல்லாதது அவமானமாக உள்ளது.

அரசியல் கட்சிகள் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்காததாலும், சௌராஷ்டிரா சமுதாயத்தில் ஒற்றுமை இல்லாததாலும் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அந்த ஒற்றுமையின்மையைப் போக்கத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அனைத்துக் கட்சிகளும் சௌராஷ்டிரா வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி நிறுத்தும்பட்சத்தில் யார் வெற்றி பெற வேண்டுமென்பதை நாங்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்" என்றார்.

செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் கே.ஆர்.எம் கிஷோர்குமார்,
செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் கே.ஆர்.எம் கிஷோர்குமார்,

இந்த நிகழ்வில் மாநாட்டுத் தலைவர் தினேஷ், செயலாளர் பிரசாந்த் ஷர்மிளா பிரகாஷ், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், இணைச்செயலாளர்கள் வி.வி.சுரேஷ், பி.எம்.முரளி, இளைஞர் அணிச் செயலாளர் அறம் உதயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் வெளிமாவட்டச் சௌராஷ்டிரா அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க