செய்திகள் :

15 Years Of Anirudh: "எண்ணற்ற நினைவுகள்; துரத்த வேண்டிய மில்லியன் கனவுகள்!" - நெகிழும் அனிருத்

post image

இசையமைப்பாளர் அனிருத் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் 'வை திஸ் கொலவெறி டி' பாடல் வெளியாகிப் பயங்கர ஹிட்டடித்தது.

15 வருடங்களில் எண்ணற்ற ஹிட் பாடல்கள், உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எனப் பல்வேறு மைல்கற்களை அவர் தொட்டுவிட்டார். திரைத்துறையில் 15 ஆண்டுகள் கடந்திருப்பது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

Anirudh
Anirudh

அந்தப் பதிவில் அவர், "15 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் எங்களின் முதல் பாடல் இந்த உலகிற்குள் அடியெடுத்து வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை இது ஒரு தொடர்ச்சியான, தடையற்ற பயணமாக இருந்து வருகிறது.

இசை, நினைவுகள், கொண்டாட்டம் மற்றும் மேஜிக் நிறைந்த 15 ஆண்டுகள். தமிழிலிருந்து தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கும், ஒரு இதயத்திலிருந்து கோடிக்கணக்கான உங்கள் இதயங்களுக்கும் சென்றடைந்த பயணம்.

சுயாதீன இசை, எங்களுக்குப் பிடித்த சர்வதேசக் கலைஞர்களுடனான கனவுக் கூட்டணிகள், எந்த மொழியாக இருந்தாலும் எங்களை அழைக்கும் அனைவருக்காகவும் பாடுவது, நாடு கண்ட மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் பங்கெடுக்கும் பாக்கியம் எனப் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தப் பயணத்தில், நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்கள், நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி, திரையுலகின் தலைசிறந்தவர்களோடு இசையையும் இனிய நினைவுகளையும் உருவாக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

ஸ்ட்ரீமிங் சாதனைகள், கோடிக்கணக்கான ரசிகர்களின் செவிகளைச் சென்றடைந்தது முதல், உலகெங்கிலும் அரங்கு நிறைந்த மைதானங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியது வரை நீங்கள் காட்டிய அன்பு அசாத்தியமானது.

இசை நிகழ்ச்சிகளின் ஆரவாரமும், அந்த உற்சாகமும், இசை எல்லைகளைத் தாண்டிப் பயணிப்பதைப் பார்க்கும் உணர்வும் நாங்கள் கனவில் மட்டுமே நினைத்துப் பார்த்த தருணங்கள்.

ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கூட்டணியும், ஒவ்வொரு சாதனையும், ஒவ்வொரு மேடையும், ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு வரம். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது எது தெரியுமா? 'எல்.ஐ.கே', 'ஜனநாயகன்', 'டி.சி', 'பாரடைஸ்' மற்றும் 'ஜெயிலர் 2' ஆகிய படங்களுடன் எங்களுக்கு இந்த ஆண்டு அற்புதமாக அமைந்ததுதான்.

15 ஆண்டுகளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்? இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, எங்களின் புதிய முயற்சியான 'ஆல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்' ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

எங்களுக்கு இவ்வளவு கொடுத்த இந்தத் திரைத்துறைக்குத் திருப்பிச் செலுத்தவும், அடுத்த தலைமுறை இசை மற்றும் திறமைசாலிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இது ஒரு நல்வாய்ப்பு.

ஒவ்வொரு வெற்றியிலும், ஒவ்வொரு சவாலிலும், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்; இனியும் ஒரு நாள் கூட ஓய்வெடுக்கும் எண்ணமில்லை. இவை அனைத்தையும் தொடங்கி வைத்த அதே இசை மீதான காதல்தான் எங்களைத் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருக்கிறது.

அனிருத்
அனிருத்

எங்கள் மனதில் இருப்பதெல்லாம் நன்றி உணர்வு மட்டுமே. எங்கள் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டவர்கள், எங்களோடு சேர்ந்து பாடியவர்கள், கொண்டாடியவர்கள், ஆதரவளித்தவர்கள், எங்களை நம்பியவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயணம் எங்களுக்குச் சொந்தமானதைப் போலவே உங்களுக்கும் சொந்தமானது.

15 ஆண்டுகள் கடந்துவிட்டன. எண்ணற்ற நினைவுகள். துரத்த வேண்டிய இன்னும் ஒரு மில்லியன் கனவுகள். மீண்டும் ஸ்டுடியோவிற்குத் திரும்புகிறோம்; மிகச்சிறந்தவை இனிமேல்தான் வரப்போகின்றன. இது ஆரம்பம் மட்டுமே!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

O.M: "புட்டபர்த்தி சாய்பாபா அவர்களே கையில் தூக்கிப் பெயர் வைத்த குழந்தை சாய் பல்லவி!" - தனுஷ்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்றைய தினம் க... மேலும் பார்க்க

O.M: "விஜய் சார் இனி நடிக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்; அதனால் தனுஷ் சார்.!" - சாய் பல்லவி

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஓ.ம் படத்தில்...இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்... மேலும் பார்க்க

O.M: "அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு விளக்கமளித்த தனுஷ்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில தினங்களுக்க... மேலும் பார்க்க

Sandiyar: "அப்போதே 'சண்டியர்' என்ற பெயரில் படம் வெளியாகிவிட்டது" - படத் தலைப்பு குறித்து தமிழ்குமரன்

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் அச்சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்த... மேலும் பார்க்க

Scene: "இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம்!” - சூர்யா

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் நவம்பர் 6 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேச... மேலும் பார்க்க

John Doe Review: க்ரைம் த்ரில்லர் டெம்ப்ளேட்டில் சில சர்ப்ரைஸ்கள்! ரசிக்க வைக்கிறானா இந்த `ஜான் டோ'?

காவல் அதிகாரியாக இருக்கும் தந்தையின் கண்டிப்பாலும், அவர் செய்யும் கேலியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார் சந்துரு (அர்ஜுன் தாஸ்). பிறகு, வளர்ந்து அவரைப் போலவே காவல் அதிகாரியாக கேரளாவில் பணியில் அமர்கிற... மேலும் பார்க்க