செய்திகள் :

'151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை இழந்தது ஏன்?'- TVK அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

post image

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன.

இடங்களை வீணடிக்காமல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (All India Quota) வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் 151 உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசும் அந்த இடங்களை வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைக்கத் தவறியதால் தமிழக அரசு இந்த இடங்களை இழந்துவிட்டதாகவும் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.

தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?

மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?

நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?

அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?

தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?

இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்னை இது.

த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' - முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை எச்சரிப்பதை போல பேசியிருந்தார்.மாமன்ற கூட்டம்நேரமில்லா நே... மேலும் பார்க்க

'சென்னை மாநகராட்சியில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்பட்டதா?' - மனம் வருந்திய விசிக கவுன்சிலர்!

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் கோபிநாத், மாநகராட்சி மாமன்ற அரங்கில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்படுவதா... மேலும் பார்க்க

`இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை; அமித் ஷா அவைக்கு வராதது ஏன்?'- நாடாளுமன்றத்தில் ராகுல்

நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அமித் ஷா அவைக்கு வராதது ஏன்? அவருக்கு துணிச்சல் இல்லையா? நீட் ... மேலும் பார்க்க

மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில் இன்று ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக தி... மேலும் பார்க்க

அமெரிக்க தளத்தில் ஈரான் தாக்குதல், ட்ரம்ப்-நெதன்யாகு, ஜெலன்ஸ்கி மீட், ஈராக் தாக்குதல் ஏன்?|#AllInOne

ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம். ஈரான் தாக்குதல்: ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல... மேலும் பார்க்க

பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணை... மேலும் பார்க்க