செய்திகள் :

"17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு?

post image

நகைச்சுவை, ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முத்துக்காளை
முத்துக்காளை

காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார்.

அவரின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சில வாரங்களுக்கு முன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மாலதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் நோய் தொற்று காரணமாக கடந்த 17 நாள்களாக மூச்சு விட சிரமப்பட்டு வரும் தனது மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவிடக் கோரி முத்துக்காளை தமிழக முதல்வர் விஜய்யிடம் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

``எனது மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த காயத்திற்காக சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் சேர்ந்திருந்தேன். ஆப்ரேஷன் முடிந்து 17 நாள்களாகிடுச்சு. மூளையில் ஏற்பட்ட ரத்த காயங்கள் சரியானாலும் கூட அதனால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக என் மனைவி மூச்சு விட சிரமப்பட்டு வருகிறார்.

முத்துக்காளை
முத்துக்காளை

இந்த நேரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சார் அவர்கள் என் மனைவியின் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்து என் மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுகிறேன். கிட்டத்தட்ட 17 நாள்களாக தனி மனிதனாக மருத்துமனையில் நின்று போராடிக்கொண்டிருக்கிறேன். தமிழக முதல்வர் எனக்கு உதவி செய்தால் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

Ravi Mohan: "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப் போவதில்லை" - கண் கலங்கிய ரவி மோகன்

கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன், ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். அப்போது இத்தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடகி ஒருவருடன், ரவி மோகன் ஒன்றாக இணைந்... மேலும் பார்க்க

TVK: "விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகின்றன" - செளந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட... மேலும் பார்க்க

What To Watch: 'கருப்பு, துரந்தர் 2, அதிரடி' - இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள்

இந்த வாரம் தியேட்டர், ஓடிடி-யில் வெளிவந்திருக்கும் படங்கள் & சீரிஸ் இவைதான்.கருப்பு - தமிழ்ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன... மேலும் பார்க்க

'இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா?' - சௌந்தர்யா ரஜினிகாந்த் 'பளீச்' பதில்

நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வ... மேலும் பார்க்க

பொருளாதார நெருக்கடி: 'திரையுலகினர் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இது.!'- கமல்ஹாசன்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க

Karuppu Review: எகிறியடிக்கும் கருப்பு; திரையரங்கைத் திருவிழா ஆக்குகிறதா இந்த ஆக்ஷன் கடா விருந்து?

மகள் பினுவின் (அனகா ரவி) அறுவை சிகிச்சைக்காக, கேரளாவிலிருந்து சென்னை வருகிறார் பினுவின் தந்தை (இந்திரன்ஸ்). சென்னைக்குப் புதியவர்கள் என்பதால், வழி தவறிச் சென்றுவிடும் பினு மற்றும் அவரின் தந்தையிடம் தி... மேலும் பார்க்க