செய்திகள் :

TVK: "விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகின்றன" - செளந்தர்யா ரஜினிகாந்த்

post image

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கினர்.

அதன் பின்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்னைக்கு 27 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கியுள்ளோம். ஐந்து மகளிருக்கு ஆட்டோக்களும் நாங்க கொடுத்திருக்கோம். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய மக்களுக்கு நல்லது செய்யணும்னு எப்பவுமே நினைச்சிருக்கோம். அப்பாவும் நிறைய செஞ்சிட்டு இருக்காரு.

நான் கன்னியாகுமரியிலிருந்து இதை ஆரம்பிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப நம்புற, ஒரு பெரிய ஆளுமை பகவதி அம்மன். இங்கிருந்து ஸ்டார்ட் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ​இது முதல் முயற்சிதான். இங்கிருந்து இன்னும் நிறைய மக்களுக்கு நாங்க நல்லது செய்வோம்.

இங்க நேரா வந்து ஒருத்தொருத்தர் முகத்தைப் பார்த்து, என் கையால அவங்களுக்கு செயற்கை கால்கள் கொடுக்கிறதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இது ஒரு தொடக்கம்தான் இன்னும் நிறைய செய்வோம்" என்றார்.

பெண் இருவருக்கு ஆட்டோ வழங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்
பெண் இருவருக்கு ஆட்டோ வழங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

இந்தத் தொண்டு நிறுவனப் பணிகளை அடுத்தடுத்து எந்தெந்த மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இங்கிருந்து இப்போது தொடங்கி உள்ளோம். இதன் பிறகு கண்டிப்பாக இந்த முயற்சியைத் தொடரணும்னு பார்க்கிறேன்" என்றவரிடம், இந்த மக்கள் நலத்திட்டங்கள் மூலம் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "​மக்களுக்கு நல்லது செய்யணும்னு வந்திருக்கோம். நல்லது எப்படி வேணுமானாலும் செய்யலாம்.

அது இப்போ நான் இங்க நல்லது செய்யணும் என்ற ஆர்வத்தில் வந்திருக்கிறேன். ஆனால்,  மக்கள் என்ன கேக்குறாங்களோ, நாளைக்கு குடும்பமா அதை நாங்க செய்வோம்" என்றவரிடம் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் த.வெ.க செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கை கால் பொருத்தும் செளந்தர்யா ரஜினிகாந்த்
மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கை கால் பொருத்தும் செளந்தர்யா ரஜினிகாந்த்

அதற்கு பதிலளித்த செளந்தர்யா, "ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. விஜய் அண்ணா தமிழ் மக்களுக்கு நல்லது செய்வாங்கன்றதை தமிழ் மக்கள் நிறைய எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. விஜய் அண்ணா அண்ட் த.வெ.க கேடர் எல்லாரும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்.

இப்போ என் குடும்பம் சார்பாகவும் விஜய் அண்ணாவுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லிக்கொள்கிறோம். விஜய் அண்ணா நிறைய சவால்களை எதிர்கொண்டு வந்திருக்கீங்க, இன்னும் நிறைய சவால்கள் வரப்போகுது. அனைத்திலும் அவர் வெற்றி பெறுவார். அவருக்கு வாழ்த்துகள்" என்றார்.

What To Watch: 'கருப்பு, துரந்தர் 2, அதிரடி' - இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள்

இந்த வாரம் தியேட்டர், ஓடிடி-யில் வெளிவந்திருக்கும் படங்கள் & சீரிஸ் இவைதான்.கருப்பு - தமிழ்ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன... மேலும் பார்க்க

'இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா?' - சௌந்தர்யா ரஜினிகாந்த் 'பளீச்' பதில்

நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வ... மேலும் பார்க்க

பொருளாதார நெருக்கடி: 'திரையுலகினர் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இது.!'- கமல்ஹாசன்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க

Karuppu Review: எகிறியடிக்கும் கருப்பு; திரையரங்கைத் திருவிழா ஆக்குகிறதா இந்த ஆக்ஷன் கடா விருந்து?

மகள் பினுவின் (அனகா ரவி) அறுவை சிகிச்சைக்காக, கேரளாவிலிருந்து சென்னை வருகிறார் பினுவின் தந்தை (இந்திரன்ஸ்). சென்னைக்குப் புதியவர்கள் என்பதால், வழி தவறிச் சென்றுவிடும் பினு மற்றும் அவரின் தந்தையிடம் தி... மேலும் பார்க்க

இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ்; தள்ளிப் போகிறதா தனுஷ் படம்? 'வாழை 2' உண்மையா? - பரபர அப்டேட்

அடுத்த அதிரடி பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டார் இயக்குநர் மாரி செல்வராஜ். 'பைசன்' படத்திற்கு பின் அடுத்து தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. 'கர்ணன்' படத்திற்கு பின் தனுஷ் -மாரி செல்வராஜ் இணையும் படம... மேலும் பார்க்க