செய்திகள் :

சிவகாசி: "பட்டாசு வெடி விபத்துகள் குறித்து ஆராய குழு அமைக்கபடும்" - அமைச்சர் கீர்த்தனா உறுதி

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீர்த்தனாவிற்கு அமைச்சர் பொறுப்பு வழங்கபட்டிருக்கிறது.

சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு தன்னுடைய தொகுதிக்குச் செல்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அதில் கூறியதாவது, "சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ என்று சொல்கிறார்கள் அதைவிட சிறந்த எம்.எல்.ஏ-வாக பட்டம் வாங்கி அண்ணாவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

இதுவரை சிவகாசியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. கடைசி ஐந்து வருடமாக அது செயல்படவே இல்லை. நாங்கள்தான் அதைத் திறந்தோம் 24 மணி நேரம் மக்களுக்காக அது செயல்படும்.

யார் யாரோ என்னென்னமோ சொல்கிறார்கள். கையில் தான் இருந்தது அவர்கள் பொறுத்திருந்தால் சான்றிதழ் கைக்கு வந்திருக்கும். மறதி என்று சொல்கிறார்கள். அதைத் தவிர்த்து இருக்கலாம்.

சிவகாசியில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்படுவது குறித்த ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என வாக்குறுதியிலே சொல்லியிருந்தேன். அதற்கான வேலைகள் நடைபெறும்.

வெடி விபத்து
வெடி விபத்து

இன்று வரை இதுபோல் யாரும் குழு அமைக்கவில்லை. கடந்த வெடி விபத்தில் கூட பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தோம். வெடி விபத்து குறித்து ஆராய்ந்தோம், பாதிக்கபட்டவர்களுக்கான நீதி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசிப்போம்.

மது விலக்கு குறித்து முதல் கையெழுத்திட்டவர் தலைவர் விஜய் அண்ணா, முக்கியமான பாதைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன இனிமேல் எந்த மாதிரி நடவடிக்கை இருக்கும் என உங்களுக்கே தெரியும் இதற்கான பதில் நான் சொல்ல வேண்டிய தேவையில்லை" என்றார்

TVK: "ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் கட்சிக்காகப் பிரசாரம் செய்த குழந்தைகள்..." - எம்.எல்.ஏ ஶ்ரீநாத்

குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள பச்சமலை விளையாட்டுத் திடலில் செயல்பட்டு வரும் புதிய விதைகள் இயக்கம். கடந்த ஓராண்டாக மாணவர்களுக்காக இலவச சிலம்பப் பயிற்சியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழர்க... மேலும் பார்க்க

"மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும்" - சி.டி.ஆர். நிர்மல்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தவெக தலைவர் தலைமையிலான... மேலும் பார்க்க

அமெரிக்கா: இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு | News Today Live Update

நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம்!வெள்ளை மாளிகை லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாள்களுக்கு நீட்டிக்கப்ப... மேலும் பார்க்க

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசு: "சட்டவிரோத சந்துக் கடைகள்..." - மது ஒழிப்பு இயக்கம் கூறுவது என்ன?

"மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்குப் பதிலாகச் சட்டவிரோத 'சந்துக்கடைகள்', கள்ளச்சாராய விற்பனை மையங்கள் உருவாகாமல் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று 'தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின்... மேலும் பார்க்க

"எல்லா விஷயங்களிலும் ஒன்றாக நிற்க முடியாது" - பினராயி விஜயனைச் சந்தித்த வி.டி.சதீசன் கூறியது என்ன?

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி. முதல்வர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன் தேர்வுசெ... மேலும் பார்க்க

த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று, இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நிலையில், இதுவரையில் அவர்களுக்கு இலாகா ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்த... மேலும் பார்க்க