"கொள்முதல் செய்த நெலுக்கு பணம் இல்லை" - முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோர...
TVK: "ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் கட்சிக்காகப் பிரசாரம் செய்த குழந்தைகள்..." - எம்.எல்.ஏ ஶ்ரீநாத்
குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள பச்சமலை விளையாட்டுத் திடலில் செயல்பட்டு வரும் புதிய விதைகள் இயக்கம். கடந்த ஓராண்டாக மாணவர்களுக்காக இலவச சிலம்பப் பயிற்சியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
தமிழர்களின் பாரம்பர்ய கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது இந்த இயக்கம்.

இந்த இயக்கத்தின் சார்பில் பயிற்சி பெற்ற 32 மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பங்கேற்றனர்.
அதில் 20 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 10 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும், ஒரு மாணவர் வெண்கலப் பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில் த.வெ.க-வைச் சேர்ந்த தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரை குழந்தைகள்தான் தெய்வம்.
ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் கட்சிக்காகப் பிரசாரம் செய்து வெற்றியைப் பெற்றுத் தந்தது இளைஞர்களும் குழந்தைகளும்தான். அதனால் எங்களின் ஆதரவும் துணையும் எப்போதும் குழந்தைகளுக்கே இருக்கும்” என்றார்.
மேலும், புதிய விதைகள் இயக்கத்தைப் பாராட்டிய அவர், குறுகிய காலத்திலேயே மாணவர்களுக்கு இலவசமாகச் சிறந்த பயிற்சி அளித்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைத்தது மிகப்பெரிய சாதனை எனத் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்ததாகக் கூறிய ஸ்ரீநாத், தமிழர்களின் பாரம்பர்ய கலையான சிலம்பத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சிக்கு முதல்வரும் தங்களின் கழகமும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார்.




.jpeg)









