செய்திகள் :

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசு: "சட்டவிரோத சந்துக் கடைகள்..." - மது ஒழிப்பு இயக்கம் கூறுவது என்ன?

post image

"மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்குப் பதிலாகச் சட்டவிரோத 'சந்துக்கடைகள்', கள்ளச்சாராய விற்பனை மையங்கள் உருவாகாமல் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று 'தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு' தெரிவித்துள்ளது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

மதுக்கடைகளை மூட பல போராட்டங்களையும், தமிழகம் முழுவதும் கருத்தரங்குகளையும் நடத்தி, அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு.

இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், "வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதை தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு மனமார வரவேற்கிறது.

மதுக்கடைகள் மூடப்படுவது, பெண்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் நீண்ட காலமாக முன்வைத்து கோரிக்கைகளுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

தமிழகத்தின் ஏழ்மை, வறுமை, இளம்பெண் கைம்பெண்ணாதல், குடும்ப வன்முறை அதிகரித்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக விபத்துகள் நடப்பதற்கு என பல்வேறு காரணங்களுக்கு மதுவே காரணமாகிறது.

தொடர்ந்து இது அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை சமூக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கிறோம்.

சி.ஜே.ராஜன்

மேலும், மூடப்படும் 717 கடைகளைப் பிற இடங்களில் தொடங்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளக்கூடாது. மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக சட்டவிரோத 'சந்துக் கடைகள்', கள்ளச்சாராய விற்பனை மையங்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நோக்கி அரசு படிப்படியாக நகர வேண்டும்.

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மது மற்றும் போதைப் பழக்க மீட்பு மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும்.

மனநல ஆலோசகர்கள், சமூகப்பணியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் இணைந்து செயல்படும் முழுமையான மறுவாழ்வு அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதன் காரணமாகப் பணி இழக்கும் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, அரசின் பிற துறைகளில் அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்

அத்துடன், மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள், இளைஞர்களுக்கான மாற்று வாய்ப்புகள், குடும்ப நல பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றையும் அரசு விரிவுபடுத்த வேண்டும்.

தமிழக மக்களின் நீண்ட நாள் கனவான மதுவிலக்கு நோக்கி முன்னேறும் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

"மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும்" - சி.டி.ஆர். நிர்மல்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தவெக தலைவர் தலைமையிலான... மேலும் பார்க்க

அமெரிக்கா: இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு | News Today Live Update

நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம்!வெள்ளை மாளிகை லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாள்களுக்கு நீட்டிக்கப்ப... மேலும் பார்க்க

"எல்லா விஷயங்களிலும் ஒன்றாக நிற்க முடியாது" - பினராயி விஜயனைச் சந்தித்த வி.டி.சதீசன் கூறியது என்ன?

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி. முதல்வர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன் தேர்வுசெ... மேலும் பார்க்க

த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று, இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நிலையில், இதுவரையில் அவர்களுக்கு இலாகா ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்த... மேலும் பார்க்க

சட்டமன்றத்தில் விவிலய வசனங்களை வாசித்தது ஏன்? - விளக்கிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 3 நாள்களுக்கு சட்டமன்றம் நடந்து முடிந்திருக்கிறது. புதிய சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் ஜே.சி.டி பிரபாகர் அவையில் பைபிள் வசனங்களையெல்லாம் குறிப்... மேலும் பார்க்க