செய்திகள் :

Pawan Kalyan: "விஜய்யுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்" - தொண்டர்களுக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

post image

தமிழ்நாட்டின் முதல்வராக, நடிகர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அவரை ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் ஒப்பிட்டுப் பேசும் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மங்களகிரியில் உள்ள தனது கட்சியின் தலைமையகத்தில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் தன் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, ``தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது முதலே, ஆந்திராவிலும் இதேபோன்றதொரு அரசியல் நகர்வைச் செய்திருக்க வேண்டும் எனப் பலரும் எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வற்புறுத்தி வருகின்றனர்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சராகிவிட்டதால், ஆந்திராவிலும் அது சாத்தியம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அண்டை வீட்டுத் திருமணத்திற்குத் தேவையில்லாமல் உற்சாகமடையும் சிறு குழந்தைகளைப் போல, ஆந்திராவின் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ளாமல் பலர் பேசுகிறார்கள்.

2019-ம் ஆண்டு தேர்தலில் தான் போட்டியிட்டபோது மக்கள் நமக்கு உரிய ஆதரவை அளிக்கவில்லை. அமைச்சர்கள் கூட நமக்கு துணையாக நிற்கவில்லை. எனவே, தயவுசெய்து என்னை விஜய்யுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.

'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. முதல்வர் ஆவதற்கு முன்பு பிரசாரத்தின் போது தனது முதல் மக்கள் சந்திப்பை விஜய... மேலும் பார்க்க

"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" - ஸ்ரீரங்கம் த.வெ.க எம்.எல்.ஏ

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், தரம் உயர்த்துவது குறி... மேலும் பார்க்க

`பாஜக-வின் சர்க்கஸ் யானைபோல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்'- திண்டுக்கல் ஐ.லியோனி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில் ... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ``அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா?" - `NO' சொல்லும் கார்த்தி சிதம்பரம்; காரணம் என்ன?

தவெக ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க-வில் இப்போது நடந்துவரும் உட்கட்சிப் பூசலெல்லாம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான செய்தியாக வலம் வருகின்றன. இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்... மேலும் பார்க்க

கைநழுவிய மெகா திட்டம்: ``தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி"- முதல்வர் விஜய்-யிடம் TRB ராஜா கோரிக்கை

இந்தியாவின் 5-ம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டமான 'AMCA' (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை, ஆந்திர பிரதேச மாநிலத்திடம் தமிழ்நாடு இழந்துள்ளது பெர... மேலும் பார்க்க

சீனா கொடுத்த பரிசுப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்ட அமெரிக்க அதிகாரிகள்; காரணம் என்ன தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் தன்னுடன் மிகப்பெரிய அதிகாரிகள் பட்டாளத்தையும் அழைத்து சென்றிருந்தார். சீன அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் நடத்திய பேச்சு... மேலும் பார்க்க