செய்திகள் :

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! மிக கனமழை பெய்ய வாய்ப்பு

post image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவ.6 வரை, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று (நவ.1) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த (நவ. ... மேலும் பார்க்க

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம்!

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் பலி!

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 14-ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். இந்த நிலையில், மண்டபம்-ராமேசுவரம் இடையே ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மேலும் பார்க்க

நாம் தமிழர் கட்சியிலிருந்து 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் நிகழ்ந்த நிலையில், இந்த அறிவிப்பு... மேலும் பார்க்க

கையில் குடை உள்ளதா? சென்னையில் இன்று கனமழை எச்சரிக்கை!

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.இந்த வாரம் தொடங்கியதிலிருந்து இதமான காலநிலையும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் ... மேலும் பார்க்க