பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய ...
2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்
கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது காவல்துறை.
இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்!
கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும் அடைமொழி வழங்கி, ஆளுங்கட்சி கர்வத்தை ஊட்டி வளர்த்து, பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல், பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாகவே மாறிவிட்ட அறிவாலயம் ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்!" என்றிருக்கிறார்.
காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்!
— Nainar Nagenthran (@NainarBJP) February 27, 2026
கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும்… pic.twitter.com/RC2ZK4wSXk


















