செய்திகள் :

"200 கூட்டாளிகள் தயாராக இருக்கிறார்கள்"- அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

post image

பாலிவுட் பிரபலங்களைச் சமீப காலமாக குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டலால் நடிகர்கள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர்.

புதிதாக நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்குக் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி டில்லான் இந்த மிரட்டலை சமூக வலைத்தளம் மூலம் விடுத்து இருக்கிறான்.

அந்தப் பதிவில், ''சமீபத்தில் விகாஸ் தாக்கூர் மற்றும் தீபக் சிங் ஆகியோரைக் கைது செய்து இருப்பது எங்களது திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

மும்பையில் எங்களது கூட்டாளிகள் சுமார் 200 பேர் செயல்பாட்டிற்குத் தயாராக இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும், சீக்கிய சமூகத்திற்கு எதிராகப் பேசுபவர்களை மிரட்டியுள்ள அவன், குறிப்பாக அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, ''அவர்கள் புல்லட் புரூஃப் (குண்டு துளைக்காத) கண்ணாடியைப் பயன்படுத்தினாலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்கள் எத்தனை குண்டு துளைக்காத அறைகளைக் கட்டினாலும், சுட்டுக் கொல்லப்படுவார்கள்," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

அதோடு 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களைக் குறிப்பிட்ட தில்லான், அந்த வன்முறைக்குக் காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், சீக்கிய சமூகத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளான்.

இந்தப் பதிவு குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். அது கோல்டி டில்லான் அனுப்பினானா என்பதை போலீஸார் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு பேரை சனிக்கிழமை அன்று கைது செய்தது. அவர்கள் பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த விகாஸ் தாக்கூர் (எ) விக்கி மற்றும் பஞ்சாபின் தர்ன் தரனைச் சேர்ந்த தீபக் சிங் (எ) தீப் எனத் தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் இல்லமான ஜல்சாவுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தக் கைது நடவடிக்கைகளின் மூலம், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு சதித்திட்டமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை அமிதாப்பச்சனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் அமிதாப்பச்சன் இல்லமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராமாயணா: ``ஜடாயுவின் சிறிய வார்த்தைதான்; ஆனால் 200 டேக் வரை எடுத்தேன்"- அனுபம் கெர் பகிர்ந்த அனுபவம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா - பாகம் 1’, வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ்,... மேலும் பார்க்க

ராமாயணம் : ``சீதை சாய் பல்லவியின் ஆக்‌ஷன் காட்சி; ஆதாரம் இதுதான்" - இயக்குநர் நிதேஷ் திவாரி விளக்கம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், இப்படத்தில் இடம்பெ... மேலும் பார்க்க

"பதற்றமடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்" - கணவர் விக்கி கெளஷல் பற்றி கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தனது கணவர் விக்கி கௌஷல் தனக்கு அளிக்கும் ஆதரவு குறித்தும், தாய்மை மற்றும் நடிப்பு குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Vicky Kaushal - Katrina Kaif2021-ம்... மேலும் பார்க்க

`என்பெயரில் இருப்பதால் எனக்குத்தான் சொந்தம்' - அமிதாப்பச்சன் இல்லத்துக்கு உரிமைகோரும் தம்பி மனைவி

மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஜல்சா பங்களாவில் வசித்து வருகிறார். அந்த வீடு அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் இந்த வீட்டிற... மேலும் பார்க்க

ராமாயணா: ``மூவுலகிலும் இனி ஒரே ஒரு ஆட்சிதான் நடக்கும், அது..." - யஷ்க்கு குரல் கொடுத்த நடிகர் ஷரத்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'. திரைப்படத்தில், ராவணனாக நடித்துள்ள நடிகர் யஷ்ஷிற்கு இந்திப் பதிப்பில் குரல் கொடுத்... மேலும் பார்க்க

Kiara Advani: " 'டாக்சிக்' படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்தன!" - கியாரா அத்வானி

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அந்தப் படத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். இந்தப் படத்தில் கியாரா அத்வானிய... மேலும் பார்க்க