செய்திகள் :

`2016 தேர்தலில் நடந்ததுதான் இப்போதும்...' - தலைமையின் முடிவால் புலம்பும் பாபநாசம் உடன்பிறப்புகள்!

post image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத தொகுதிகளில் ஒன்று பாபநாசம். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் திமுக இங்கு நேரடியாக போட்டியிட்டது. அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திமுக தலைமை இங்கு வாய்ப்பு கொடுக்கிறது. சொல்லப்போனால் திமுக இந்த தொகுதியில் நேரடியாக வெற்றி பெற்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டது. இம்முறை திமுக-வுக்கு தொகுதி சாதகமாக இருந்தும் கூட்டணிக்கு தாரை வார்த்து விட்டதால், வாய்ப்பு கை நழுவி போகும் நிலை ஏற்படும் என பாபநாசம் உடன் பிறப்புகள் மனப்புழுக்கத்தில் உள்ளனர். எளிதாக வெல்ல வேண்டிய தொகுதியை அதிமுக கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அதிமுக -சண்முக பிரபு

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``பாபநாசம் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜவாஹிருல்லா உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இம்முறை திமுக நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் விரும்பினர். முத்துச்செல்வம், அய்யாராசு, கலைச்செல்வன், தாமரைச்செல்வன், பாவை ஹனீபா உள்ளிட்ட பலரும் விருப்ப மனு அளித்திருந்தனர். தொகுதிக்குள் எடுத்த சர்வேயிலும் திமுக போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் திமுக-வினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான், அதிமுக-வில் அய்யப்பன் என்கிற சண்முக பிரபு, தவெக-வில் அசாருதீன் உதுமான் அலி, நாம் தமிழர் கட்சியில் அனீஸ் பாத்திமா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுக-வில் போட்டியிடும் சண்முக பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த துரைக்கண்ணு மகன். தேர்தலுக்காக வைட்டமின்களை தயாராக வைத்திருக்கிறாராம்.

திமுக கூட்டணியில் ஷாஜகான்

இரண்டு மாதங்களுக்கு முன்பு தனக்கு சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக குலதெய்வ கோயிலில் வழிப்பட்டவர், கிடா வெட்டி பெரிய அளவில் விருந்து வைத்திருக்கிறார். சண்முக பிரபு நினைத்தது போல் அவருக்கு சீட் கிடைத்து விட்டது. மண்ணின் மைந்தன் என்பதை முன்னெடுத்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். மற்ற கட்சிகளைச் சேர்ந்த ஷாஜகான், அசாருதீன் உதுமான் அலி, அனீஸ் பாத்திமா ஆகியோர் பாபநாசம் தொகுதியை சேர்ந்தவர்கள் கிடையாது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சண்முக பிரபு காட்டில் அடை மழை.

இப்போதே வெற்றி தனக்கு தான் என்பது போல் தோரணையாக வலம் வருகிறார். ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து எல்லோரையும் கரைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு சாதகமாக இருந்த தொகுதிகளில் பாபநாசமும் ஒன்று. விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில், தலைவரே யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள், ஆனால் நாம்தான் நேரடியாக களமிறங்க வேண்டும், தொகுதி மக்களும் இதை தான் விரும்புகின்றனர் என கோரஸாக கூறினர்.

தவெக- அசாருதீன் உதுமான் அலி

இதன் பிறகும் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்குச் சென்றது. 2021ல் வென்று எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தொகுதிக்குள் இல்லை என்பதே பரவலான குற்றச்சாட்டாக மக்கள் முன் வைத்தனர். இப்போது திமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஹாஜகான் ஆடுதுறையைச் சேர்ந்தவர். கடந்த எம்.பி தேர்தலில் பாசநாசம் தொகுதி அடங்கிய மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதா வெற்றி பெற்றார்.

இப்போது சுதா தொகுதிக்குள் வருவதே இல்லை. இதனால் பாபநாசம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோகநாதன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதிமுக-வில் மறைந்த துரைக்கண்ணு வெற்றி பெற்றார். அப்போது திமுக போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். இதே போல் தற்போது திமுக போட்டியிடாததால் தொகுதியை அதிமுக கைப்பற்றுவதற்கான சூழல் அமைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி- அனீஸ் பாத்திமா

திமுக தலைமை உடனடியாக இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மறுபரிசீலனை செய்து திமுக-வைச் சேர்ந்த ஒருவரை களமிறக்க வேண்டும். இல்லை என்றால் தொகுதியின் வெற்றி கானல் நீராகி விடும். திமுக-வின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஒத்த கருத்துடன் இதை சொல்கிறோம். யாரையாவது வைத்து கள நிலவரத்தை தலைமை அறிய வேண்டும். அதன் பிறகு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் பாபநாசம் திமுக-வினரின் எண்ணமாக இருக்கிறது" என்றனர்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க