செய்திகள் :

21 வயது உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது; சந்தேகமிருந்தால் ஆதாரை செக் செய்யுங்க - TASMAC உத்தரவு

post image

21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

"தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003 விதி எண் 11A -ன் படி 21-வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.

மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது".

தருமபுரி: ஆட்சி மாற்றத்தால் நிகழ்ந்த மாற்றம்! - நகருக்குள் பேருந்துகள் வந்து செல்ல உத்தரவு!

"இனி சேலத்திலிருந்து தருமபுரிக்கு வரும் பேருந்துகள் இரவில் தருமபுரி நகருக்குள் வந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும்" என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரிநக... மேலும் பார்க்க

புதுச்சேரி: 5-வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் ரங்கசாமி! - Album

முதலமைச்சர் ரங்கசாமி பதவியேற்பு விழாமுதலமைச்சர் ரங்கசாமிஅமைச்சர் நமச்சிவாயம்அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்மேடையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்அரசு உயரதிகாரிகள்முதலமைச்சர் ரங்கசாமிகவர்னர் கைலாஷ்நாதன் ... மேலும் பார்க்க