TN Election: புதுமண தம்பதி, குழந்தையுடன் பெற்றோர் முதல் 92 வயது பாட்டி வரை; வாக்...
₹25 லட்சம் கையில் இருக்கிறதா? மாதம் ₹10000 பெறலாம் + 25 வருடம் கழித்து ₹45 லட்சம்! எப்படி?
ஒருவரிடம் ₹25 லட்சம் மொத்தமாக (Lumpsum) கிடைத்தால், முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? "இதை எங்கும் விட்டுவிடக் கூடாது, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்பதுதான். முதலீட்டு உலகில் இதை 'Loss Aversion' (இழப்பு பயம்) என்று சொல்வார்கள். ஆனால், இந்தப் பாதுகாப்பு உணர்வுதான் உங்கள் பணத்தின் மதிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பணத்தை அழிக்கும் ‘பாதுகாப்பு’ மாயை
உங்களிடம் உள்ள ₹25 லட்சத்தை அப்படியே வங்கியில் பாதுகாப்பாக வைத்தால் என்ன நடக்கும்? பணவீக்கம் (Inflation) என்ற கண்ணுக்குத் தெரியாத திருடன் அதன் வாங்கும் திறனை ஒவ்வொரு வருடமும் குறைத்துக்கொண்டே இருப்பான். 10 வருடங்களுக்கு முன்பு ₹25 லட்சத்தில் வாங்க முடிந்த நிலத்தையோ, பொருளையோ இன்று அதே தொகையில் வாங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எனவே, பணத்தைப் பாதுகாப்பது மட்டும் முதலீடு அல்ல; அதை வளரச் செய்வதே உண்மையான முதலீடு.
Lumpsum + SWP: முதலீடும் வருமானமும்
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைக் கண்டு பயப்படாமல், உங்கள் ₹25 லட்சத்தை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் (Balanced Advantage Fund) போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். இதில் நீண்டகால அடிப்படையில் சராசரியாக 10% வரை வளர்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது.
இதில் பணத்தை போட்டுவிட்டு அப்படியே காத்திருக்க வேண்டியதில்லை. SWP (Systematic Withdrawal Plan) என்ற அற்புதமான முறையைப் பயன்படுத்தலாம். அதாவது, உங்கள் முதலீட்டில் இருந்து ஆண்டுக்கு 5% தொகையை மட்டும் உங்களின் மாதாந்திரச் செலவுக்காகத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது.
இதை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்ப்போம் :
உங்கள் மொத்த முதலீடு: ₹ 25 லட்சம்
எதிர்பார்க்கும் வளர்ச்சி: 10% (ஆண்டுக்கு)
மாதாந்திர வருமானம் (SWP): ₹ 10,417 (ஆண்டுக்கு 4%)
இரண்டாம் ஆண்டில் இருந்து மாத வருமான்த்தை 6% அதிகரித்துக்கொள்கிறீர்கள் (பணவீக்கம் காரணமாக)
இனி 25 வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும்?
நீங்கள் 25 ஆண்டுகளில் மாதாமாதம் எடுத்த மொத்தப் பணம்: ₹ 68 லட்சம் (உங்கள் அசல் தொகையை நீங்கள் முழுமையாக திரும்ப எடுத்துவிட்டீர்கள்) .
25 வருட முடிவில் உங்கள் கணக்கில் மீதம் இருக்கும் தொகை: தோராயமாக ₹ 45 லட்சம் !
நீங்கள் எடுக்கும் தொகையை விட, முதலீடு ஈட்டும் லாபம் அதிகமாக இருப்பதே (Power of Compounding) இந்த மாயாஜாலத்துக்குக் காரணம். இந்தக் கணக்கின் அட்டவணையைக் கீழே காணலாம்.

இந்த முறையின் சிறப்பம்சங்கள்
பணவீக்கத்தைத் தாண்டிய வளர்ச்சி: சாதாரண வட்டி விகிதங்களை விட அதிக லாபம் கிடைப்பதால், உங்கள் பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறையாது.
அவசரகால சுதந்திரம்: ரியல் எஸ்டேட் முதலீட்டைப் போலச் சிக்கலில்லாமல், எப்போது தேவைப்பட்டாலும் பணத்தை எளிதாக எடுத்துக்கொள்ளும் வசதி (Liquidity) இதில் உண்டு.
தலைமுறைத் தாண்டும் சொத்து: உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கான செலவை எடுத்த பிறகும், வாரிசுகளுக்கு ஒரு பெரிய தொகையை விட்டுச் செல்ல முடியும்.
₹25 லட்சத்துக்கு மேல் கையில் வைத்திருப்பவர்கள், குறுகிய கால பயத்தை விட்டுவிட்டுத் தொலைநோக்குடன் சிந்திக்க வேண்டும். சரியான நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் முதலீடு செய்தால், உங்கள் பணம் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும். இதுவே வளமான எதிர்காலத்துக்கான (Prosperous Future) திறவுகோல்!
லம்சம் முதலீட்டாளர்களுக்கான ஒர்க் ஷாப்
நீங்கள் ₹ 25 லட்சம் அல்லது அதற்கு மேல் மொத்த பணம் (லம்சம்) வைத்துள்ளீர்களா? அதை எங்கு, எவ்வாறு முதலீடு செய்யலாம்? மாத பென்ஷன் பெறுவது எப்படி?
அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் வரும் ஞாயிறு, ஏப்ரல் 26, காலை 11 மணிக்கு, மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr26-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr26_2026





















