செய்திகள் :

30 ஆண்டுகளில் 325 மில்லியன் டாலர் லஞ்சம்: சீனாவில் முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

post image

சீனாவில் லஞ்சம் பெற்ற முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, அந்த நாட்டு நீதிமன்றம்.

நான்ஜிங் நகரின் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் முன்னாள் துணை இயக்குநர் யாங் யூலின்.

இவர் 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து மொத்தம் 2.21 பில்லியன் யுவான் (கிட்டத்தட்ட 325 மில்லியன் டாலர்) லஞ்சமாகப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீனா
சீனா

லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு நிதியில் முறைகேடு செய்தது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என்றும், நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் பொருளாதார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அரிதான ஒன்றாக இருந்தாலும், அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெற்று வரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், அண்மைக் காலங்களில் பல உயரதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜி ஜின்பிங், "கட்சியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அனைத்து ஊழல் வைரஸ்களையும் முற்றிலுமாக அகற்றுவோம்" என்று உறுதியளித்திருந்தார்.

இந்தச் சூழலில் யாங் யூலினுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஊழலுக்கு எதிரான சீன அரசின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க