Vijay Sethupathi: 'முதல் தமிழ் திரைப்படம்!' - ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சே...
₹4,000 மதிப்புள்ள Canva Subscription இனி இலவசம்: Jio-வின் புதிய சலுகை - யாரெல்லாம் பெறலாம்?
Canva-வில் போஸ்டர், Presentation, Resume, Instagram post என பலவற்றை உருவாக்குபவர்களுக்கு, Jio தற்போது புதிய சலுகையை அறிவித்துள்ளது. Jio மற்றும் Canva இணைந்து, தகுதியுள்ள Jio வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்கள் வரை Canva Pro அல்லது Canva Pro Lite-ஐ கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்குகின்றன. இந்தச் சலுகை செப்டம்பர் 16, 2026 முதல் கிடைக்கிறது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்தச் சலுகை அனைத்து Jio பயனர்களுக்கும் ஒரே மாதிரியாக கிடையாது. நீங்கள் பயன்படுத்தும் Jio recharge plan-ஐப் பொறுத்தே Canva Pro அல்லது Pro Lite கிடைக்கும்.
₹399 Jio plan-ஐ recharge செய்யும் தகுதியுள்ள பயனர்களுக்கு 12 மாதங்கள் Canva Pro கிடைக்கும்.
அதேபோல், ₹ 349plan மற்றும் ₹ 349-க்கு மேல் உள்ள தகுதியான 2GB/day plans பயன்படுத்துபவர்களுக்கு Canva Pro Lite 12 மாதங்களுக்கு கிடைக்கும்.

அதாவது, “Jio SIM இருந்தாலே Canva Pro இலவசம்” என்பது சரியல்ல. Eligible recharge plan தேவை.
எப்படி பெறுவது?
சலுகையைப் பெறுவதற்கான activation MyJio app மூலம் செய்யலாம். Eligible recharge செய்த பிறகு MyJio app-ல் Canva offer-ஐத் திறந்து activation செய்ய வேண்டும். பின்னர் Canva account-ல் login அல்லது account creation செய்து subscription-ஐ activate செய்யும் நடைமுறை வழங்கப்பட்டுள்ளது.
Canva Pro-வில் என்ன கிடைக்கும்?
Canva Pro மூலம் premium templates, photos, videos, fonts உள்ளிட்ட பல paid creative resources-ஐ பயன்படுத்த முடியும். மேலும் Background Remover, Magic Eraser, AI-powered creative tools போன்ற வசதிகளும் உள்ளன.
Pro Lite என்றால்?
Pro Lite-லும் premium templates, photos, videos, fonts, background removal போன்ற பல வசதிகள் உள்ளன. ஆனால் முழு Canva Pro-வை ஒப்பிடும்போது சில advanced features மற்றும் usage limits குறைவாக இருக்கும். உதாரணமாக, Brand Kit மற்றும் AI usage போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன.

மாணவர்களுக்கும் Creators-க்கும்?
Jio–Canva கூட்டணி, students, content creators, entrepreneurs மற்றும் small businesses உள்ளிட்டவர்கள் professional-quality visual content உருவாக்குவதற்கான கருவிகளை எளிதாகப் பெற வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. Canva-வில் Hindi உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் content உருவாக்கும் வசதிகளும் உள்ளன.
₹4,000 மதிப்பு கொண்ட Subscription … இலவசமா?
இந்த partnership மூலம் கிடைக்கும் Canva subscription-ன் மதிப்பு 4,000 என Jio/Canva தொடர்பான reports தெரிவிக்கின்றன. ஆனால் அந்த மதிப்பு உங்களுக்கு கிடைக்கும் Pro அல்லது Pro Lite tier-ஐப் பொறுத்தது என்பதை கவனிக்க வேண்டும்.
அதனால் அடுத்த முறை jio யூசர்கள் recharge செய்வதற்கு முன், உங்கள் plan இந்த Canva offer-க்கு eligible-ஆ இருக்கிறதா என்பதை MyJio-வில் சரிபார்ப்பது முக்கியம்.





















