செய்திகள் :

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

post image

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

"கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும்.

ஈரான் போர்
ஈரான் போர்

கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும்" என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்க... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட... மேலும் பார்க்க

"ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச்.23) ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இதுவரைக்கும் ஊழல் ... மேலும் பார்க்க

`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' - தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க