DMK -வில் OPS? | Vijay உடன் இணையும் MGR விசுவாசி? | ADMK -வில் OPS ஆதரவு MP | TV...
“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது" - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா
தூத்துக்குடியில் தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளின் மீதும் அனைத்து தலைவர்களின் மீதும் சி.பி.ஐ வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு போன்ற எல்லா வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதை வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கிறார்கள். தே.மு.தி.க., வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி.

தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்கள்தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ நம் கட்சிக்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் என் கையில் கொடுத்திருக்கிறார் சரியான நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது.
வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கபட இருக்கிறது. பிரதமர், அவருடைய கூட்டணிக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்றிருக்கிறார். அது குறித்து நான் ஒன்னும் சொல்ல முடியாது. விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பா.ஜ.க-வா அல்லது தேர்தலுக்காக அரசியலுக்காக செய்கிறார்களா, படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று அத்திரைப்படத்தின் ஹீரோவான விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.

சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன். விஜய்யை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கிறேன். தி.மு.க., கடந்த 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சியால் 50% நல்லதும் நடந்திருக்கிறது. 50% நடக்க வேண்டியதும் இருக்கிறது” என்றார்.















