செய்திகள் :

``50 முறை முயன்றுவிட்டேன் முடியவில்லை" - உயிரை மாய்த்துக்கொண்ட 'கோல்ட் மெடலிஸ்ட்' இஞ்சினியர்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். 2024-ம் ஆண்டு தனியார் கல்லூயிரியில் பி.டெக் முடித்த இவர், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கரங்களில் பட்டமும் கோல்ட் மெடலும் பெற்றார். கல்லூரி படிப்புக்குப் பிறகு அரசு வேலையில் சேர்வதில் ஆர்வம் காண்பித்த ஆனந்த் குமார், ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கிகள் மற்றும் கல்வித் துறை ஆகியவை நடத்திய ஆள்சேர்ப்புத் தேர்வுகளில் பங்கேற்றார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. கடந்த சில மாதங்களாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், குடும்பத்தார்கள் ஆனந்த் குமாரின் அண்ணனுக்கு பெண் பார்க்க சொந்த ஊரான பீகாருக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது ஆனந்த குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில், வீட்டு வேலைக்காக உதவி செய்ய வந்தப் பணிப்பெண் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை.

உயிரிழந்த ஆனந்த் குமார்
உயிரிழந்த ஆனந்த் குமார்

அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறைக்கும் தகவலளிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், வீட்டுக் கதவை உடைத்து சோதனை செய்தபோது, வீட்டில் ஆனந்த குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

காவல்துறையினரின் சோதனையில் ஒரு தற்கொலைக் கடிதம் கிடைத்தது. அதில், ``அப்பா 50 முறை அரசு வேலைக்காக முயற்சி செய்துவிட்டேன். ஆனால் என்னால் வெற்றிபெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். இனி என்னால் தோற்றவனாக வாழ முடியாது." என எழுதப்படிருக்கிறது. இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணனையும் தொடங்கியிருக்கிறது.

தற்கொலை தடுப்பு மையம்

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க