செய்திகள் :

50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

post image

தமிழ் சினிமாவில் முக்கியமான தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.

நேற்று தான் இவருடைய  பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடிய சூழலில் இன்று காலமானார்.

தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை ஏ.வி. எம் நிறுவனம் வழங்கியதில் சரவணனின் பங்கு அளப்பரியது.

தந்தையின் காலத்துக்குப் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை அதே பாரம்பரியத்துடன் இவர் நடத்தியதை தமிழ் சினிமாவில் பலரும் இப்போது நினைவு கூர்கிறார்கள்.

அமைதியாகப் பேசுபவர். வெள்ளை பேன் ட் வெள்ளை சர்ட் இவரது அடையாளம். பெரிய பின்புலம் இருந்த போதும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை, தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் தன் கைப்பட நன்றிக் கடிதம் அனுப்பும் வழக்கம் என இவர் குறித்துப் பேச எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன.

சினிமா போலவே சீரியல்களும் தயாரித்தார். விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்படும் உயரிய சினிமா விருதான எஸ் .எஸ் வாசன் விருது கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

சினிமா பிரபலங்கல் பலரும் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,

மறைந்த சரவணனின் உடலடக்கம் இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெறுகிறது.

``ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை" - எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக... மேலும் பார்க்க

Samantha: "நிழல்போல நானும், நடைபோட நீயும்!" - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா மேலும் பார்க்க

Angammal: "அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு!" - கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அங்கம்மாள்' படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்... மேலும் பார்க்க

"திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயத்தையும் ஏத்துக்கிறேன்!"- இயக்குநர் கலையரசன் பேட்டி

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ஜென்சன் எனப் பலர் நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தை ஓடிடி-யிலும் மக்கள் பலர் கண்டுகளித்து வ... மேலும் பார்க்க

Malavika Mannoj: ``மறந்தேனே என்ன மறந்தேனே'' - நடிகை மாளவிகா மனோஜ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் மேலும் பார்க்க

Ajith: "சூப்பர் ஸ்டார் நடிகரின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது!" - அஜித் குறித்து அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்... மேலும் பார்க்க