செய்திகள் :

'6 சீட் கேட்கும் தவாக; மௌனமாக அனுப்பி வைத்த அறிவாலயம்!' - என்ன சொல்கிறார் வேல்முருகன்

post image

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

வேல்முருகன்

அவர் பேசியதாவது, 'தவாகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டுமென்றும் தமிழ்ச் சமூகத்துக்கான சில கோரிக்கைகளையும் கொடுத்திருக்கிறேன். ஒரு நாடாளுமன்றம் மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளையும் கேட்டிருக்கிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.

ஈழப்படுகொலைக்கு எதிராக பன்னாட்டு விவாதமாக எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் பணிகள் 100% தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

கோவில்களில் குடமுழுக்கு, அர்ச்சனை போன்றவை தமிழில் செய்ய வேண்டும்.

சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும்.

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும்.

வேல்முருகன்
வேல்முருகன்

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு வட மாநிலத்தவர்கள் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறேன்' என்றார்.

எல்லாருக்கும் சீட்டை குறைக்குறாங்களாமே உங்களுக்கும் குறைப்பாங்களா சார்? என ஒரு நிருபர் கேட்க, 'எனக்கு இதுக்கு மேல குறைக்கவே முடியாது. போன முறை கொடுத்ததே ஒண்ணுதான்' என வெடித்துச் சிரித்தார்.

6 சீட் கேட்ட வேல்முருகனுக்கு 'பேசிவிட்டு சொல்கிறோம்' என சம்பிரதாய பதிலை கூறி அனுப்பியிருக்கிறது அறிவாலயம்.'

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.நாளை காலை புதுச்சேரியில் நடக்கு... மேலும் பார்க்க

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்... மேலும் பார்க்க

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' - அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார்.கருணாஸ்அவர் பேசியதாவது, 'மீண்டும் திமுகவ... மேலும் பார்க்க

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" - குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' - தனியரசுவின் வினோத பெருமிதம்!

அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் ஒரு ஏழைக்கட்சியென ஜாலியாக பேச... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

இன்று அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர்‌ காமேனியின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி, ஈரானின் தலைநகரான டெஹ்ரான், அணு ஆயுத பகுதிக... மேலும் பார்க்க