செய்திகள் :

7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!

post image

தூத்துக்குடி மாவட்டம்,  எட்டயபுரம்  தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு நிலவிய கல்லீரல் பிரச்னை காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றை குழந்தையின் பெற்றோர் அணுகியுள்ளனர். அப்போது, அறுவை சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து உறவுமுறைச் சான்று பெற்று வருமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமூக வலைதளம் மூலமாகக் கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜசேகரனைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.

வட்டாட்சியர் சுபா

இதனைத் தொடர்ந்து, அவர் சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவுடன் இணைந்து எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வட்டாட்சியர் சுபாவைச் சந்தித்து, குழந்தையின் மருத்துவ அவசர நிலையை விளக்கியுள்ளனர். மனுவின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட வட்டாட்சியர் சுபா, எவ்வித காலதாமதமும் இன்றி சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாகச் சான்று கிடைக்கப் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் சோழபுரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து வட்டாட்சியரிடம் சமர்ப்பித்தனர்.  அறிக்கை வந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் அலுவலகத்தில் இல்லாத நிலையிலும், மாற்று ஏற்பாடாக வேறொரு பிரிவு அலுவலரைத் தொடர்பு கொண்டு உடனடியாக உறவுமுறை சான்றைத் தட்டச்சு செய்ய வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி

இதன் மூலம், மாலை அலுவலக நேரம் முடியும் முன்பாக, அதுவும் விண்ணப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் உரிய சான்றிதழ் வழங்கப்பட்டது. வருவாய்த்துறையில் சம்மந்தப்பட்ட சான்றிதழ்களைப் பெறப் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வரும் சூழலில், குழந்தையின் மருத்துவ அவசரத்தை உணர்ந்து மனிதநேயத்துடன் துரிதமாகச் செயலாற்றிய எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் இந்தச் சேவையை சமூக அஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசாணை வெளியிட்ட தமிழக அரசு - எப்போது தொடங்குகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அரசாண... மேலும் பார்க்க

மேகதாது: `புதிய நடுவர் மன்றம்... தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும்' - எச்சரிக்கும் சீமான்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், சட்டசபையில் கடந்த 19ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத... மேலும் பார்க்க

கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா!

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, அந்தக் கட்சி கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக 60 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி... மேலும் பார்க்க

சர்வதேச சந்தைக்கு வரும் ஈரான் எண்ணெய்; இந்தியாவுக்கு ப்ளஸ் தானா?

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன... முக்கிய முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. அப்படி நேற்... மேலும் பார்க்க

``செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" - முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம், எதிக்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பார் எனக் கூறப்... மேலும் பார்க்க

"'ஈவில்ஸ், ஈவில்ஸ்'ன்னு டெவில்ஸ் எங்களைப் பார்த்து சொல்றாங்க; ஆனா..." - ஆக்ஷனோடு உரையை முடித்த விஜய்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். அவையில் பேசிய அவர், "எனக்கும் எங்களது அமைச்சருக்கும் எதுவும் தெரியாது என்று பேசுக... மேலும் பார்க்க