செய்திகள் :

717 மதுக்கடைகளை மூட உத்தரவு: "எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்..." - நடிகர் விஷால் சொல்வது என்ன?

post image

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் அருகில் 276, கல்வி நிறுவனங்கள் அருகில்186, பேருந்து நிலையங்கள் அருகில் 255 என மொத்தம் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 4,765 மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இந்த 717 கடைகளை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விஷால் தன் எக்ஸ் பக்கத்தில், ``முதல்வர் விஜய்-க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! அன்பிற்குரிய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, 717 மதுக்கடைகளை, குறிப்பாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளை மூடுவதாக நீங்கள் அறிவித்ததற்கு மிக்க நன்றி.

எப்பேர்ப்பட்ட ஒரு சிறப்பான நடவடிக்கை இது! எத்தனையோ பெண் பிள்ளைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் ஆர்.கே. நகரில் நடந்தது. அங்கு ஒரு மாணவி, தினமும் மதுக்கடையைக் கடந்துதான் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குறை கூறியிருந்தார்.

அவரும், அவரைப் போன்ற எண்ணற்ற பொதுமக்களும் உங்களையும், உங்களின் இந்த முடிவையும் மனதாரப் பாராட்டுவார்கள். நமது முதல்வரின் இந்த முடிவின் மூலம், 'மது' எனும் இந்தத் தீமையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைத்துள்ளது.

இதனால் என்னையும் சேர்த்து, பலருடைய முகங்களிலும் மகிழ்ச்சிப் புன்னகை தவழ்கிறது. அன்பிற்குரிய விஜய் அவர்களே, இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! இன்றும், என்றும் உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டென்று மாறுது வானிலை: " `என் நெஞ்சில் குடியிருக்கும்'னு மேடையில பேச ஆசை" - நடிகர் ஜெய்

பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாபு விஜய். இவர் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய படத்தை இயக்கியிர... மேலும் பார்க்க

" ’சர்கார்’ பட போஸ்டரை கிழித்தபோது நான் கண்ணீருடன்.!" - ஏ.ஆர் முருகதாஸ் எமோஷனல்

ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு நடிப்பில் பாபு விஜய் இயக்கியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை'. பாபு விஜய் ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ள நில... மேலும் பார்க்க

`விஜய் அண்ணா சொன்னதை செய்வார்; இனி எல்லாம் நல்லதாகவே...'- பதவியேற்பு விழாவுக்கு ஓடி வந்த நடிகர் ஜெய்

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய். விஜய்யுடன் நெருக்கமாக சினிம... மேலும் பார்க்க

"இப்போது அவர் தமிழ்நாட்டின் 'ஜனநாயகன்' ஆகிவிட்டார்!" - பதவியேற்பு விழாவில் 'ஜனநாயகன்' தயாரிப்பாளர்!

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய். விஜய்யுடன் நெருக்கமாக சினிம... மேலும் பார்க்க

Vijay: `கடல் வற்றும் வரை விஜய் மீது நான் கொண்டுள்ள அன்பு நிலைத்திருக்கும்!'- நெகிழும் நடிகர் ஶ்ரீமன்

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய். விஜய்யுடன் நெருக்கமாக சினிம... மேலும் பார்க்க