செய்திகள் :

AC: ஏசி-யின் நட்சத்திரக் குறியீடுகள் என்ன சொல்கின்றன? - 5 Star - 3 Star AC வித்தியாச கணக்கு என்ன?

post image

ஏசி நட்சத்திர குறியீடு, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நட்சத்திர குறியீடுகளும் எதனை கடத்துகிறது.? இது குறித்து தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு விளம்பர வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் கணேசன் கூறுவது என்ன?

5 Star - 3 Star AC வித்தியாசங்கள்

மின்சாரச் சிக்கனத்தைப் பற்றிப் பேசும்போது நட்சத்திரக் குறியீடுகள் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண ஏசி ஒரு மணி நேரத்திற்கு பத்து யூனிட் மின்சாரத்தை எடுக்கிறது என்று வைத்துக்கொண்டால், மூன்று நட்சத்திரக் குறியீடு கொண்ட இன்வெர்ட்டர் ஏசி அதை ஏழு யூனிட்டாகக் குறைக்கும்.

அதுவே ஐந்து நட்சத்திரக் குறியீடு கொண்ட ஏசியாக இருந்தால், வெறும் ஐந்து யூனிட் மின்சாரத்திலேயே இயங்கும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவு மின்சாரக் கட்டணம் மிச்சமாகும். நான்-இன்வெர்ட்டர் ஏசிகளில் மின்சாரச் சேமிப்பு இருக்காது, ஏனெனில் அதில் கட்-ஆஃப் வசதி கிடையாது, அது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

காற்றின் வீச்சும் குளிர்ச்சித் தன்மையும்

ஏசி வாங்குவதில் மற்றொரு முக்கியமான அம்சம் காற்றின் வீச்சு ஆகும். மூன்று நட்சத்திர ஏசிகளில் பெரும்பாலும் இரண்டு பக்கக் காற்று வீச்சு மட்டுமே இருக்கும். ஆனால் ஐந்து நட்சத்திர ஏசிகளில் நான்கு பக்கக் காற்று வீச்சு, அதாவது இடது, வலது, மேல், கீழ் என அனைத்துப் பக்கங்களிலும் காற்று வீசும் வசதி இருக்கும்.

அதேபோல், ஐந்து நட்சத்திர ஏசிகளின் விங்ஸ் எனப்படும் காற்று மடல்கள் அகலமாக இருக்கும் என்பதால், காற்றைச் சற்றுத் தூரமாக வீசும் திறன் கொண்டது. இதனால் உங்கள் அறை வெறும் ஐந்து நிமிடங்களிலேயே மிகக் குளிர்ச்சியாக மாறிவிடும், ஆனால் மூன்று நட்சத்திர ஏசியில் இது ஏழு முதல் எட்டு நிமிடங்கள் வரை ஆகலாம்."

AI யுகத்தில் ஏசியின் உருமாற்றம்!

கால ஓட்டத்திற்கு ஏற்ப விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைத்து துறைகளிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஏசி பயன்பாட்டிலும் தன்னுட... மேலும் பார்க்க

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏசி-யை இயக்குகிறீர்களா? - இது உங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்!

கோடையில் வியர்வை மழையில் நனைந்து கொண்டு இருக்கும் நாம், வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏ.சி வாங்குகிறோம்.அப்படி வாங்கும் ஏசியை கோடை காலத்தில் எப்படி பயன்படுத்துவது, நீண்ட காலமாக பயன்படுத்தாமல் தீடீ... மேலும் பார்க்க

AC: ஏசி வாங்குறீங்களா? - 1 Ton, 1.5 Ton, 2 Ton... யாருக்கு எது பெஸ்ட்? - EB Billஐ எப்படி குறைப்பது?

ஏசி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஇதோ கோடை வந்துவிட்டது. வெளியில் சென்றால் மட்டுமல்ல நிழலில் இருந்தாலும் வியர்வையில் குளித்து விடுவோம். கோடையின் உக்கிரத்தை தணிக்க மலை வாசஸ்தலங்களுக்கு நம்மில் பலரும் ... மேலும் பார்க்க

LPG தட்டுப்பாடு: கேஸ் சிலிண்டரை 'இப்படி' புக் செய்யாதீர்கள்; இது பக்கா மோசடி

மக்களின் தேவை, பயம் - இது தான் மோசடிகளின் அடித்தளம். இந்த மோசடிகள் காலத்திற்கேற்ப தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம் - எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் மோசடி.ஈரான் போரினால் இந்... மேலும் பார்க்க

2026: AI உலகில் நடக்கப்போகும் மாற்றங்கள்! - இனி பேச்சு இல்ல, வீச்சுதான்!

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகை ஒரு புயல் போல ஆக்கிரமித்திருந்த செயற்கை நுண்ணறிவின் (AI) மீதான அதீத மோகம், தற்போது 2026-ல் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டை உலகளாவிய தொழில்... மேலும் பார்க்க

Area 51: `ஏலியன்கள் உண்மையானவர்களா?' - ஏரியா 51 ரகசியங்களை உலகுக்கு திறக்கும் டொனால்ட் ட்ரம்ப்

நள்ளிரவு வானத்தில் மின்னும் ஒரு மர்ம ஒளி, மனிதக் கண்களுக்குப் புலப்படாத வேகத்தில் நகரும் விண்கலங்கள், மற்றும் பல தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் பூட்டி வைத்திருக்கும் ரகசியக் கோப்புகள் - இவை அனைத்தும்... மேலும் பார்க்க