செய்திகள் :

Age is Just a number Bro... 60 வயதிலும் இளமை: ரகசியம் சொல்லும் சுவான்டோ டான்

post image

சிங்கப்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் மாடலுமான சுவான்டோ டான் (Chuando Tan), அண்மையில் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல்வதைப் போன்ற இவரது இளமை மாறாத தோற்றம் தற்போது உலக அளவில் இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாக அறுபது வயதில் ஒருவருக்குத் தோன்றும் முதுமையின் அறிகுறிகளோ, நரையோ இவரிடம் துளியும் தென்படவில்லை. இதனால் வியப்படைந்த நெட்டிசன்கள், இவர் ஒரு "நிஜ காலத்து வாம்பயர்" என்று வர்ணித்து வருகின்றனர்.

சுவான்டோ டான் (Chuando Tan)

இவரது இந்த அசாத்தியமான இளமைக்கு 70 சதவீதம் உணவுப் பழக்கமும், 30 சதவீதம் உடற்பயிற்சியுமே காரணம் என்று அவர் கூறுகிறார். தினமும் காலையில் ஆறு முட்டைகளைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், கொழுப்பைக் குறைக்க அதில் நான்கு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.

இது தவிர, சிக்கன், மீன் மற்றும் காய்கறிகள் அடங்கிய புரதம் நிறைந்த உணவுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார். குறிப்பாக சர்க்கரை, காபி, மது மற்றும் சிகரெட் போன்ற பழக்கங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது தனது ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

உணவுக்கு அடுத்தபடியாக, முறையான உடற்பயிற்சி இவரது வாழ்க்கைமுறையின் அங்கமாக உள்ளது. வாரத்திற்கு ஐந்து நாட்கள் ஜிம் சென்று கடுமையானப் பயிற்சிகளை மேற்கொள்வதோடு, தினமும் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.

வெறும் உடலளவில் மட்டுமன்றி, மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்று கருதும் சுவான்டோ, தினமும் அதிகாலை வரை விழித்திருப்பதைத் தவிர்த்து, இரவு 11 மணிக்கு முன்பே உறங்கச் செல்வதை ஒரு விதியாகவே வைத்துள்ளார். சரியான ஓய்வு உடலின் செல்களைப் புதுப்பித்து, இளமையைத் தக்கவைக்க உதவுவதாக அவர் நம்புகிறார்.

தனது 60-வது பிறந்தநாள் குறித்துப் பேசிய அவர், வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதைத் தனது தோற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளார். அதே சமயம், தனது இளமைக்கு மரபணு ரீதியான காரணங்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை அவர் மறுப்பதற்கில்லை.

எதுவாக இருந்தாலும், முறையான உணவுக்கட்டுப்பாடும், விடாமுயற்சியுடன் கூடிய உடற்பயிற்சியும் இருந்தால் எவரும் ஆரோக்கியமான முதுமையை அடைய முடியும் என்பதற்குச் சுவான்டோ டான் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாகங்கள்!

`தமிழ்நாடு 2030 இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்பது திண்ணம்! திண்ணம்!' - தமிழ்நாடு அரசுதமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும்... மேலும் பார்க்க

ஈரான் போர்; வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை செய்த அதிபர் ட்ரம்ப் - புகைப்படங்கள் வைரல்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள்... மேலும் பார்க்க

'வாட்ஸ்அப் உரையாடலை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது' - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒருவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் குடும்ப நீதிமன்றம், மனைவி தரப்பு ... மேலும் பார்க்க

பகுவா பாடல்கள் படி மாணவர்களுடன் ஹோலி கொண்டாடிய ஆளுநர் ரவி | Video

பாடல்கள் படி ஆளுநர் ஆர். என் ரவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார். இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்து வ... மேலும் பார்க்க

மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் ... மேலும் பார்க்க