செய்திகள் :

T20 World Cup: "ரோஹித் சர்மாவை என் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்" - சூர்யகுமார் யாதவ்

post image

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மார்ச்.8) அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

இந்தியாவும் - நியூசிலாந்தும் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கபில் தேவ், தோனி, ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் நான்காவது கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் நேற்று (மார்ச்.7) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் சூர்யகுமார் யாதவ், " அணியை வழிநடத்துவது ஒரு மகிழ்ச்சியான உணர்வு.

சொந்த மண்ணில் இவ்வளவு அற்புதமான அணியை இறுதிப் போட்டியில் வழிநடத்துவது சிறப்பான அனுபவம்.

நிச்சயமாக, பதட்டங்கள் இருக்கும். இந்திய அணி உற்சாகமாக உள்ளது.

நாங்கள் எல்லாவற்றையும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறோம், சிக்கலாக்க விரும்பவில்லை.

இவ்வளவு பெரிய நிகழ்வில் இந்தியாவை வழிநடத்துவது எனக்கு ஒரு நீண்ட பயணம்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றிருக்கிறார்.

தொடர்ந்து, ரோஹித் ஷர்மா குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், "ரோஹித் சர்மாவை ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், மூத்த சகோதரராகவும் வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்.

களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நான் முதலில் உதவிக்காக அழைப்பது ரோஹித் சர்மாவைத்தான்.

ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ்
ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ்

இக்கட்டான சூழலிலும் ரோஹித் காட்டும் நிதானம் எனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்திருக்கிறது .

வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, ரோஹித்தின் குணாதிசயங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

நான் அவருடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் எப்படி வேலை செய்தார் என்பது எனக்குத் தெரியும்.

ரோஹித் தனது வீரர்களை எவ்வாறு அணுகுவாரோ அதே பாதையை நானும் பின்பற்றுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

"இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே நோக்கம்"- சாண்ட்னரின் சர்ச்சை கருத்து; சூர்யாவின் பதிலடி என்ன?

2026 டி20 உலககோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச்.8) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சாண்ட... மேலும் பார்க்க

`‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவுதான் ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன்!' - சூர்யகுமார் யாதவ்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜேக்கப் பெத்தேலின் அதிரடியை கடந்து இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.Suryakumarபோட்டிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் பேசியவை, ... மேலும் பார்க்க

ஈரான் - இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி

'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக... மேலும் பார்க்க

Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' - அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்

ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய ந... மேலும் பார்க்க

NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.!" - மார்க்ரம்

நேற்று ஈடன் கார்டன்-ல் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,நியூசிலாந்து அணி 170 என்ற ஸ்கோரை 13 வது ஓவரிலேயே அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்த... மேலும் பார்க்க

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன?தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில்... மேலும் பார்க்க