செய்திகள் :

"இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே நோக்கம்"- சாண்ட்னரின் சர்ச்சை கருத்து; சூர்யாவின் பதிலடி என்ன?

post image

2026 டி20 உலககோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச்.8) பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

சாண்ட்னர்
சாண்ட்னர்

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னர், "அகமதாபாத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

நாங்கள் அவர்களுக்கு பிடிக்காதவர்களாக இருந்தாலும் கூட அணியாக ஒன்றிணைந்து கோப்பையை வெல்வோம்" என்று கூறினார்.

இந்தக்கருத்துகள், 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் அதே மைதானத்தில் ஆஸ்திரேலியக் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதைப் போலவே இருந்தன.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது சாண்ட்னரின் இந்தக் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " எல்லாரும் ஒரே வரியை சொன்னா எப்படி? ஏதாச்சும், புதுசா சொல்லுங்க" என சிரித்துக்கொண்டே பதில் அளித்திருக்கிறார்.

T20 World Cup: "ரோஹித் சர்மாவை என் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்" - சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மார்ச்.8) அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவும் - நியூசிலாந்தும் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கி... மேலும் பார்க்க

`‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவுதான் ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன்!' - சூர்யகுமார் யாதவ்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜேக்கப் பெத்தேலின் அதிரடியை கடந்து இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.Suryakumarபோட்டிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் பேசியவை, ... மேலும் பார்க்க

ஈரான் - இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி

'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக... மேலும் பார்க்க

Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' - அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்

ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய ந... மேலும் பார்க்க

NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.!" - மார்க்ரம்

நேற்று ஈடன் கார்டன்-ல் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,நியூசிலாந்து அணி 170 என்ற ஸ்கோரை 13 வது ஓவரிலேயே அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்த... மேலும் பார்க்க

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன?தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில்... மேலும் பார்க்க